உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S6 வாய்ச் சொற்கள் காட்சி : 1 அவ்வை, அதிகமான் அவ்வை:நெல்லும் உயிர ன்றே நீரும் உயிர் அன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம். இது தென்னகைத்தின் குரல். அதிகன்: புலவர்கள்தாம் மன்னர்க்கு உயிர். இது என்னகத் தின் குரல். நான் ஒன்று கேட்கிறேன். நம் இருவர் கையில் ஒன்று உள்ளது. அது பொது எது? அவ் : கோல், ஒன்று செங்கோல் மற்றொன்று எழுது கோல். அதி: அவ்: ஒன்று புறத்திற்கு மற்றொன்று அகத்திற்கு. செங்கோல் நாட்டைச் செம்மை படுத்துவதற்கு எழு துகோல் உள்ளத்தை உயர்த்திப் பண்படுத்துவதற்கு. உங்கள் சொற்கள் இந்தெல்லிக்கனிபோல் எனக்கு இனிக்கின்றன. இனிய கவிதை தரும் உங்கள் வாய்க்குச் சுவைக்க இக்கனி தருகின்றேன். நீங்கள் தரும் கவிதையை நான் சுவைக்கின்றேன். நான் தரும் கனியை நீங்கள் சுவைக்க வேண்டுகின்றேன். (அவ்வையின் அழகிய கூந்தலை வருடி விடுகின் றான். அவ்வை, கனியைச் சுவைத்து உண்கிறார்) வேல் நுழையும் இடமெல்லாம் நீ நிற்கின்றாய்; உண்ணும் இடமெல்லாம் நான் இருக்கின்றேன்; சோறும் கறியும் யாம் உண்ண நீ மகிழ்ந்து அளிக்கின்றாய்!