உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதி: அவ்: அதி: 57 யாம் ஒருநாள் வந்திலம்; இரு நாள், வந்தி லம், பலநாள்பயின்று பலரொடு வந்தாலும் தலை நாள் போன்ற விருப்பொடு இருப்பு அளிக்கின்றாய். யானை தன் கோட்டிடை வைத்த கவளம்போலப் பாட்டிடை வைத்த பரிசில் எங்களுக்கு உரியது. உம் பாராட்டுக் கேட்டு நான் உவகையுறுகின்றேன். உம் பாட்டுத்தான் என்னை வெற்றி வீரனாக்கு கின்றது. வெற்றி வீரன். உன போர்க்கோலம் எங்கள் கண் களை விட்டு அகலாது. அதனை ஒர் அழகிய சித்திரமாகக் காண்கின்றேன். கையிலே வேல்; காலில் கழல், மெய்யிலே வியர்; மிடற்றில் பசும்புண். வெற்றிசூடிய உன் சுருண்ட முடி என் நினைவை விட்டு எப்படி அகலும் புலி யைப் பொருத களிறு போல உன் சினம் மாறாது. செறுவரை நோக்கச் சிவந்த கண் நின் சிறுவனை நோக்கியும் அமையவில்லயே! இந்தப் போர்க் கோலம் என் கவிதையில் அழகிய சொற்கோலமாக இடம்பெறுகிறது. இனிக்கிறது. யாழொடும் கொள்ளாது. பொழு தொடும் புணராது.பொ. ருளறியவாராது. ஆயினும் தந்தையர்க்கு அச்சொற்கள் அமுதமாக இனிக் கின்றன. என் சொற்களும் தங்களுக்கு அதேபோல் இனிமை செய்கின்றன. அது மட்டுமா! ஊர்ச் சிறுவர் யானையின் வெண்கோடு கழுவ அது நீர்த் துறை படியும்; அதைப்போல எமக்கு நீ இனியை, யானையின் கடாம்போலப் பகைவர்க்கு இன்னாய் நீ, அவ்வையே! உம் வாய்ச்சொல் எனக்கு இனிமை பயக்கிறது; ஒப்புக்கொள்கின்றேன் மற்றொன்றும்