உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S8 அவ்: கபி: அவ்: கபி: அவ்: எதிர்பாக்கின்றேன். அஃது உறுதியையும் பயக்க வேண்டும். தொண்டைமானிடம் உம் வாய்ச் சொல் எனக்கு உதவ வேண்டும். தூது சென்று ஏது காட்டிப் போரை நிறுத்த வேண்டும் இதுதான் வேண்டுவது. அப்படியே செய்கிறேன். கபிலர் என்னைக் காண விழைகின்றார். வருகின்றேன்; விடை பெறுகின் றேன். காட்சி : 2 அவ்வை, கபிலர். வாய்ச்சொல் அவ்வையின் வாய்ச்சொற்கள் ஒரு நாட்டின் போரையே நிறுத்தின. என் சொற்கள்! அதோ அவ்வையாரும் வந்துகொண்டிருக்கிறார்கள், வாருங்கள். ஏதோ தனிமொழி பேசிக்கொண்டிருந்தீர்களே? உங்கள் வாய்ச் சொற்கள் ஒரு போரையே நிறுத்திவிட்டன. அதைத்தான் நினைத்துக் கொண் iதேன். நான் உண்மையைத்தான் சொன்னேன். இங்கே பீலி அணிந்து மாலை சூட்டிக் காம்பு திருத்தி நெய்யணிந்து காவல் நிறைந்து அழகிய மாளிகையில் தொண்டைமானின் படைகள் கொலு வீற்றிருக்கின்றன. அங்கே அதிகனின் படைகள் பகைவரைக் குத்திக் கோடுநுதி சிதைந்து கொல்லன் உலைக்க ளத்தில் குலைந்து கிடக்கின்றன என்றேன். இது தான் நான் சொன்னது.