உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபி: அவ்: கபி: 59 போர் நின்றது; நானும் அங்கதம் பேசினேன்; போர் மூண்டது. இதைத்தான் ஒப்பிட்டு ஆராய் ந்து கொண்டிருக்கின்றேன். 'பாரி பாரி என்று ஒருவன் புகழ்வர் செந்நாப் புலவர்; பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்புதுவே. என்று அவன் பெருமையைப் பாடினேன். வஞ்சப் புகழ்ச்சி என்று என் வாய்ச் சொல்லுக்கு அணிநயம் கண்டனர். உம்மையும் அவ்வாறே புகழ்கின்றனர். உம்முடைய பாட்டு அமைதியை ஆக்கியது; என் னுடைய பாட்டு அமைதியைப் போக்கியது ஆக்கப்பாடல் உம்முடையது; அழிவுப் பாடல் என்னுடையது, உலகு புரப்பது பாரி என்றீர்; அதனால் உலகில் மாரிக்கு இடமில்லாமல் போய்விட்டது; உலகம் கொந்தளிப்புப் பெற்றுவிட்டது. உலகே இந்தப் பாட்டைக் கேட்டுப் பகையாக மாறியது. புகழைக் கண்டு பாரியை அகழ்ந்து விட எண்ணினர். மூவேந்தர். நாடும் குன்றும் ஒருங்கே சூழ்ந்து கொண்டனர். அதனால், அதனால், என் வாய்ச் சொல் லின் விளைவு மூவேந்தரைச் சினக்கச் செய்தது. அவன் குன்றைப் பாடினேன்; அவன் புகழைப் பேசினேன். இதுதான் நான் செய்த தவறு. நீரினும் இனிய சாயற் பாரிவேள்பால் பாடிச் சென் றால் பரிசில் கிடைக்கும் என்று பலருக்கு வழி காட் டினேன். பாடு வார் க்குப் பறம்பு உரியது என்றேன். பரிசிலர் இரப்பின் பாரி அவர் வழி நிற்பான் என்று கூறினேன்.