உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபி: 63 உங்கள் வாய்ச்சொற்கள் நெஞ்சைப் பிளக்கின்றன. குன்று என்று சொல்லும்பொழுது நான் பெருமை யோடு பேசினேன். போரினால் பகைவர் வெல்ல முடியாத வளமும் வாழ்வும் பெற்றிருந்தோம். வளம் அதன் அகத்து உடைத்து. ஒரு பக்கம் மூங்கில் நெல்; மற்றொரு பக்கம் தீஞ்சுளைப் பலா கீழே வள்ளிக் கிழங்கு மேலே குன்றிலே குன்றாத தேன்; நெல்லும், பழமும், கிழங்கும், தேனும் சொல்லுமே அதன் வளத்தை. வானம் அளக்கும் மலையும், மீனை நிகர்க்கும் சுனையும் நானே அவர்களுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டேன். 'மரந்தொறும் பிணித்த களிற்றறினிர் ஆயினும் தாளிற் கொள்ளலிர் வாளில் தாரலன் யான் அறிகுவன் அது கொள்ளுமாறே 'என்று நானே வழிகாட்டிக் கொடுத்துவிட்டேன். சுகிர்புரி நரம்பின் சீறியாழ்ப் பண்ணி விரையொலி கூந்தல் நும் விறலியர் பின்வர ஆடினிர் பாடினிர் செலினே நாடுங் குன்றும் ஒருங்கீ யும்மே." இதுதான் என் வாய்ச் சொல். அதை நினைத் துத் தான் என் தவற்றினை உணர்கின்றேன். உமணர் செலுத்திய உப்பு வண்டிகளைப் பார்த் துப் பொழுதுபோக்கி வந்த உங்களைப் பகைவர் செலுத்திய பரித் தேர்களைக் கண்டு அஞ்சி வேர்க்கும்ப்டி செய்து விட்டேன். நோகின்றேன் நான் வேகின்றேன் சொல் லொணா வேதனையால், சாகின்றேன் நான், வழி ஒன்றும் தெரியாக் காரணத்தால்.