உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்: அதி: அவ்: 67 விட உங்கள் சொல் ஆற்றல் மிக்கது. வாய்ச் சொல்லுக்கு இவ்வளவு ஆற்றல் உள்ளது என்று நீங்கள் ஒப்புக்கொள்ளும் பொழுது உண் மையில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் எங்கள் நா அசைவது உங்கள் வீரம் அசைந்தால்தான். வீர மும் கொடையும் எம் நாவைத் தாலாட்டுகின்றன. அதைத்தான் இத் தமிழகம் பாடல் என்று பாராட்டுகிறது. உம் வீரம்தான் எங்கள் உள்ளத்தை அசைக்கிறது. ஞாயிறுமுன் இருள் நிற்காது; புலி உடன் றால் மான்கணம் நில்லா, கல் பிளக்க நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறை என்பது ஒன்று இல்லை; நீ களம் புகுந்தால் பொருநர் பொரார். இத்தகைய வீரம்தான் என் நாவை அசைக்கின்றது. அதைத்தான் நான் முன்னமே சொன்னேன். எங் கள் செங்கோல் நாட்டைச் செம்மைபடுத்துகிறது: உங்கள் எழுதுகோல் உள்ளத்தைப் பண்படுத்து கிறது. இப்போழுது மற்றொன்றையும் சேர்த்துக் கொள்கிறேன். எங்கள் வேல் பகைவர் மார்பில் மட்டும் பாய்கின்றது; உங்கள் சொல் அதையும் கடந்து அவர்கள் உள்ளத்தை ஊடுருவுகின்றது. உள்ளத்தை ஊடுருவுவது மட்டும் அல்ல; உயர்த்த வும் செய்கிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனார் வாய் ச் சொல் தமிழகத்தையே உயர்த்திவிட்டது. நாடு என்பது வெறும் மண்ணல்ல; நீர் அல்ல; மன்னன் என்று மோசிகீரனார் பாடினார். இன்னும் ஒரளவுக்கு இக் கருத்தை விரிவு படுத்த விரும் புகின்றேன். மன்னனை மட்டும் பொறுத்தது அல்ல நாடு; மக்களையும் பொறுத்து இருக்கிறது.