உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அதி: அவ்: அதி: அவ்வை: 'எவ்வழி ஆடவர் நல்லர், அவ்வழி நிலம் வாழும் இதுதான் என் முடிந்த கருத்து. மக்கள் உள்ளத்தைப் பண்படுத்தும் கருத்து. நெல் லிக்கனியின் சுவை சுவைக்கும்தோறும் இனிக்கும்; உங்கள் வாய்ச்சொற்கள் நினைக்கும்தோறும் இனிக் கின்றன. நெல்லிக்கனியின் அருமையை மறைத்துச் சாதல் நீங்க எனக்கு அளித்தாய்; இதை நினைக்கும் தோறும் என் கற்பனை எங்கோ பறக்கிறது. அஞ் சிய உயிர்களை நஞ்சை உண்டு காத்த மணிமிட ற்றோன் என் நினைவுக்கு வருகிறான். நீலமணி மிடற்று ஒருவன் போல நீயும் மன்னுக என்று வாழ்த்துவதைத் தவிர வேறு நான் என்ன சொல்ல முடியும். உங்கள் கவிதை அழியா வாழ்வு பெற்றது. நான் அழிந்தால், என் வரலாறு உங்கள் வாய்ச்சொல் லில் வாழ்வு பெறும். காட்சி:4 அவ்வை, கபிலர் “அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றுங் கொண்டார்யாம் எந்தையும் இலமே! என்று உருக்கமாகக் கூறிய அவர்கள் செய்தி