உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் : சொல்லின் செல்வன் காட்சி: 1 L0fᎢ©Ꮘ) ©

பம்பைப் பொய்கைக் கரை

(தாமரையும் குவளையும் மலர்ந்து இருக்கின்றன. மயிலும் அன்னமும் நடக்கின்றன. மான் நிற்கிறது. சீதையின் உருவெளித் தோற்றம் இராமன் கண்களு க்குப் புலப்படுகின்றது. மங்கிய ஒளியில் இக் காட்சி சீதை 'கல்', 'கல்' என்ற ஒலி எழுப்பி அன்னம் போன்று நடந்து செல்கின்றாள். அன்னப் பறைவை ஒன்றை இராமன் காண்கின்றான். சீதையின் உரு வெளித் தோற்றம் மறைகின்றது) ராமன்: அன்னமே! சீதையின் நடையைக் கற்கும் நீ அவள் ந கு எங்கே இருக்கின்றாள் என்று கூறக்கூடாதா ? அவள் நடையை அறியும் நீ, அவள் சென்ற இடத்தை உரையாயா? உருவெளி: (சீதையின் மலர்ந்த முகம் காண்கிறான்; அவள் இரா : புன்முறுவல் செய்கிறாள். மறைகிறாள்.) (தாமரை மலரைக் கையிலேந்தி நிற்கிறான்) வண்ணத்தாமரையே! அவள் முகத்தை மட்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறாய். அவள் முழு வடிவத்தைக் காட்டக் கூடாதா? அவள் நிறம் உன்னிடம் இருக்கின்றது. ஆனால் அவள் அழகு உன்னிடம் இல்லை. அவள் பொலிவை நீ பெற வேண்டுமானால் போ, நீரில் நின்று தவம் செய்; முயன்று பார் (அதனை வீசி எறிந்து விடுகிறான்.)