உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா : கருங்குவளையே ! அவள் கண்களை நினைவு படுத்துகின்றாய். அவள் பஞ்சுபூத்த விரலாள்; பவழம்பூத்த அடியாள் என் நெஞ்சுபூத்த நிலை யாள், குவளையே! நஞ்சு பூத்த உன் சிரிப்பால் என்னை நலிவிக்கின்றாயே! உருவெளி: (மயில்போல் நடக்கின்றாள் சீதை) இரா : (மயிலைப் பார்த்து) ஆடும் களிமயிலே சீதையின் சாயலுக்குத் தோற்று ஒடிய நீ இன்று ஆடுகின்றாய்; தோகை விரித்து ஆடுகின்றாய்; உன் விரித்த தோகையில் ஆயிரம் கண்களைப் பெற்றி ருக்கின்றாய்; இந்த ஆயிரம் கண்களுக்குமா சீதை அகப்படவில்லை! - உருவெளி : (சீதை கோபமாக விறுவிறுப்போடு நடக்கிறாள்) இரா : இவள் என்னோடு முரண்கொண்டு விறுவிறுப் பாகப் போகின்றாள். அவள் எங்கே போவாள்? தாய் வீட்டுக்குத்தான் போவாள். (மீண்டும் தாம ரையை எடுத்து விளித்து) திருமகள் உறையும் தாம ரையே திருமகளாம் என் சீதை உன்னிடம்தான் வந்துமீண்டும் குடிபுகுந்திருக்க வேண்டும், நீயே அவளை இல்லை என்று கூறிவிட்டால் நான் வேறு எங்குத்தேடுவேன்? வண்ணத் தாமரையே! சீதையின் எண்ணத்தை என்னிடம் உரைக்கக் கூடாதா? உருவெளி :(சீதை தனியாகச் சோகத்தோடு முகத்திரையிட்டு இரா : வேறுபுறம் திரும்பி நிற்கிறாள்.) ஒவியம் புகையுண்டது போல் சோகத் தோடு நிற்கிறாள். முன் அவள் இடைதான் மெலிந் திருந்தது; இப்பொழுது அவளே மெலிந்து நிற்கிறாள். முன் அவள் குளிர்ந்த கண்களை மழைக்கண் என்றேன். இப்பொழுதோ கண்ணில்