உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/ மழையே பொழிகிறதே! மழைக்கண் என்பதை நிறுவி விட்டாளே! மானே! நானே! ஒருக்காலும் உன்னைப் பின்தொடரேன்! இலக்குவன் : (நுழைதல்) அண்ணா! யாருடன் பேசு இரா. இல : கின்றீர்? அண்ணியைக் கண்டு விட்டீர்களா? அதோ அவள் நிற்கிறாளே. அவள் உன் கண்ணுக்குப் புலப்படவில்லையா? அவள் இம்மான் வேண்டாம் என்கிறாள். பொன்மான் வேண்டுமாம். தம்பி, நீ இங்கேயே காவ லாக நில். இதோ ஒரு நொடியில் அப் பொன்மானைப் பிடித்து வருகிறேன். அண்ணா ! மீண்டும் பழைய நினைவுகளா? நாம் இப்பொழுது எங்கே இருக்கின்றோம்? உன் அண்ணியைப் பிரிந்த நிலையில் இருக்கி றோம்? (கண்களில் நீர்மல்க நிற்கிறான்) அவள் என க்காக உணவு சமைத்து வைத்திருப்பாள். அருந்தும் மெல்லடகு இடுவாள் ; நீயும் வா. அவள் இடுவாள்; நாம் தொடுவோம். உங்களை மறந்து இப்படிக் கனவு உலகத்தில் சுற்றுகிறீர்கள். அங்கேதான் என் சீதையைக் காணமுடிகின்றது; நனவில்----- அன்னையைத் தேடிக் காண்போம்; கற்பனை மறந்து உண்மைக்கு வருவோம் காட்சி : 2 மலைச்சாரல் (வில்லேந்திய கையராகி இராமனும் இலக்குவனும் சபரி காட்டிய மலை நோக்கிச் செல்கின்றார்கள்)