உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்: கபி: 73 கையறு நிலையில் சொல்லுக்குச் செயல் இல்லை; வெறும் உணர்வுதான் இனிப் பேசும். அந்த உணர்வில் ஒரு சில செய்திகளை நாம் விட் டுச் செல்கின்றோம். அவையே வாய் மொழிகளாக நிற்கின்றன. நானும் வாய்மொழிக் கபிலன் என்ற நிலையைப் பெறுகின்றேன். தங்கள் சொற்களும் வாய்ச் சொற்களாக நின்று நிலவுகின்றன. கேகயன் மகள் அல்லது உறுதிகொண்ட நெஞ்சினாள் முன்னுரை இந்நாடகம் மூன்றாவதாக அமைத்துள்ளேன். இலக்கிய நாடகங்களில் இஃது உச்சநிலை பெறு கிறது. கம்பனின் படைப்பைப் புதிய பார்வையில் காணும்பேறு இந்நாடகத்தில் கிடைக்கிறது. கேகயன் மகளின் துய்மை உணர்வும் உறுதியும் காவியத்தின் உயிர் என்பதைப் புலப்படுத்துகின்றது. சொல்லின் செல்வன் கம்பனின் பாடல்களை அடி யொட்டியது. இது பாத்திரப் படைப் பின் இயக்கத்தை ஒட்டி அமைந்தது. தமிழ் இலக் கியத்தைச் சுவைத்து எழுதிய இந்நாடகம் சொல் லாடும் திறனும், பாத்திரங்களின் கூர்த்த அறிவும், புதிய கருத்துகளும் கொண்டு புதிய சிந்தனையைத் தருவது. கேயன் மகள் அறிவும் பண்பும் நிறைந்த ஒரு பெண்ணாக இதில் விளங்குகின்றாள். பழைய பாத்திரங்கள் எனினும், புதிய பார் வையில் அவர்கள் செயலும், பண்பும், நிகழ்ச்சி