உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தசரதன்: களும் காட்டப்படுகின்றன. கதை பழையது. அதனை மாற்ற உரிமை இல்லை. படைப்புப் புதி யது. நடிப்பதைவிடப் படிப்பதற்கு உகந்தது. பாத் திரங்கள் அறிமுகம் தேவையில்லை. கேகயன் மகள் அல்லது உறுதி கொண்ட நெஞ்சினாள் காட்சி : 1 தசரதன், வசிட்ட முனிவர் (தனியே ) கண்ணாடிமுன் நின்று தன் உருவத் தைப் பார்க்கின்றான். ஓ! கரிய முடி என் வயதைக் கண்டு வெறுத்து விட்டது. நாணத்தால் வெறுத்ததோ ஒ வயது ஆகி விட்டது. வயது ஆகிவிட்டது. பருவம் மாறுகிறது. அதை உணர்த்த உருவம் மாறுகிறது. (பின்னொலி) (உள்ளொளி) மன்னா! கரிய முகில்தான் தசரதன்: மழை பொழியும். வெண்முகில் காற்றில் பறந்து திரிய வேண்டியதுதான். நீ இப்போது வெண் முகில்தான் போ. நிற்காதே. கருமைக்கு ஆட்சி கொடு. கருமை, மழை முகில் இராமனுக்கு ஆட்சி! (பின்னொலி) போ நிற்காதே! போ நிற்காதே! தசரதன்: நிற்காதே. இராமனுக்கு ஆட்சியைக் கொடுத்து விடு. நீ காட்டுக்குப் போய்த் தவம் செய். (பின்னொலி) நல்ல முடிவு. போ நிற்காதே!