உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 வசிட்டன்: (நுழைகிறான்) நிற்காதே! என்னையா நிற்காதே என்று சொல்கின்றீர்! நான் ஒரு தவறும் செய்ய வில்லையே! தசரதன். நிற்காதே; முதலில் இராமனுக்கு மணிமுடி சூட்ட வேண்டும். நாளையே நடக்கவேண்டும், தக்க முயற்சிகள் அத்தனையும் செய்யவேண்டும். வசிட்டன்: தாங்கள்! தசரதன். உங்களோடு சேர்ந்து தவம் செய்யவேண்டும் இது தான் நான் கொண்ட முடிவு. வசிட்டன்: எப்படியும் எங்களுக்கு வேதனையாகத்தான் இருக்கிறது. இரண்டு கன்றினுக்கு இரங்கும் பசுவைப் போல் ஆகிவிட்டது எங்களுக்கு மூத்த கன்று நீங் கினால் தான் இளைய கன்று பால் குடிக்க முடியும். அவலமும் உவகையும் ஒருசேர வந்து நிற்கின்றன. தசரதன் முதலில் அப்படித்தான் இருக்கும். பிறகு ஒன்று தலை தூக்கி நிற்கும்! என் உள்ளொளி உணர்த் துகிறது, நான் விடுதலை பெற வேண்டும் என்று. திருமணக் கோலம் கண்ட நான் என் மகனின் மணிமுடிக் கோலத்தையும் காண விழைகின்றேன். என் இளைய மனைவி! அருமைத் துணைவி! ஆருயிர்த் தேவி! வசிட்டன்: கேகயன் மகளைத்தானே சொல்கிறீர். தசரதன். கே.கயன் மடந்தையைத் தான் கூறு கிறேன். மட்டற்ற மகிழ்ச்சி கொள் வாள் மகன் பட்டத்திற்கு வருகின்றான் என்று வசிட்டன்: திட்டமிட்டுச் செயல்புரிவாள் தசரதன் முதற் செய்தியை முதன் முதலில் நான்தான்