உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 கைத்தறி நெசவாளர்களுக்கும், திராவிட முன் னேற்றக் கழகத்திற்கும் மிகமிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நான் இங்கே பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் கைத்தறி நெசவாளர்களுடன் இரண்டற ஒன்றிப் பழகியிருக் கிறோம். அவர்களுடைய வேதனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம் அவர்களுக்காக வெறும் கூச்சல் போடுகிறவர்களாக இல்லாமல், அவர்களுக்கென சில பல ஆக்க வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறோம். மூன்று, நான்கு ஆண்டுகளுக்குமுன், கைத்தறிக்கு மார்க்கட் இல்லாமல் போய்-கைத்தறித் துணிகளை மதிப்பாரில்லை என்கின்ற அளவுக்கு நாட்டிலே நிலைமை வளர்ந்து - சேலம், கோவை, துறையூர், உறையூர் போன்ற இடங்களிலே கைத்தறி நெச வாளர்கள் குடும்பம், குடும்பமாகப் பட்டினிச் சுமை யைத் தாங்க முடியாமல் சென்னை போன்ற இடங்க களுக்குப் படையெடுத்து வருகிறார்கள்; மந்திரிமார் களுடைய வீட்டு வாசலிலே முகாமிடுகிறார்கள்; தங்க ளுடைய அவலக் குரலை அவர்களுடைய காது வலிக்க. வலிக்க எடுத்துச் சொல்லுகிறார்கள்; என்ற வேதனை யான செய்தியை நாம் கேட்டோம்! அந்த நேரத் திலே, தேங்கிக் கிடக்கிற கைத்தறித் துணிகளுக்கு, நல்லதொரு மார்க்கட்டை உண்டாக்கித் தரவேண் டும்; நல்லதொரு மதிப்பை ஏற்படுத்த வேண்டும் என் கிற காரணத்திற்காக, கழகத்திலுள்ள அத்தனை பேர் களும் - முன்னணி வீரர்களும்- தலைவர்களும்-கிளைக் கழகங்களின் செயலாளர்களும் மாவட்டச் செய லாளர்களும் கைத்தறி துணிகளைத் தோளிலே சுமந்து ஒவ்வொரு ஊரிலும் தெருத் தெருவாகச் சென்று . - க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/103&oldid=1703652" இலிருந்து மீள்விக்கப்பட்டது