உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தலைவர்கள் நம்முடைய குறைகளை எடுத்துச் சொல்ல மாட்டார்களா?-என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் விழாவிலே குழுமி யிருக்கிறார்கள். கைத்தறி நெச வாளர்களுடைய குறைகள் துடைக்கப்படவில்லை என்பதையும், அதற்கான குரல் அங்கிங்கெனாதபடி எங்கும் எழும்பிக் கொண்டிருக்கிறது என்பதையும் அரசியல் அறிவு படைத்தோர் மறுக்க முடியாது. சென்ற தடவை கூடிக் கலைந்திருக்கின்ற சென்னை சட்ட மன்றத்தில் கவர்னர் பெருமான் அவர்கள் தன்னுடைய உரையை நிகழ்த்திய நேரத்தில், எதிர்க் கட்சியிலே உட்கார்ந்திருக்கிற நாங்களெல்லாம் அந்த உரையிலே யிருக்கின்ற விஷயங்களை எடுத்து ஆய்ந்து, அறிந்து காங்கிரசு சட்ட மன்ற உறுப்பினர் களுக்கு எதிரே.-ஆளும் அமைச்சர்களுக்கு எதிரே- விவாதித்துப் பேசிய நேரத்தில், அவரது நீண்ட உரையிலே எந்தெந்த பிரச்னைகளைப் பற்றியோ பேசப்பட்டிருந்தாலும் - இரண்டாயிரம் பொலி காளை களைப் பற்றியும் கோழிப் பண்ணைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தாலும், கைத்தறி நெசவாளர்களைப் பற்றி ஏதோ ஒன்றிரண்டு வார்த்தைகளே காணப் படுகின்றன என்று சுட்டிக்காட்டி உணர்த்தினோம். நாடெங்கிலும் கைத்தறி வாரம கொண்டாடப்படு கின்ற நேரத்திலே, கைத்தறி நெசவாளர்களுடைய துயர் துடைப்பதற்காக இருக்கின்ற திட்டங்கள் என்னென்ன என்று கவர்னர் உரையிலே எடுத்துச் சொல்லப்படவில்லை. என்பதை திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார்பாக அங்கே நாங்கள் எடுத்து உரைத்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/102&oldid=1703651" இலிருந்து மீள்விக்கப்பட்டது