உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 மேம்பாடு அடையாவிட்டாலும், மரப்பட்டைகளையோ இலைதழைகளையோ தன்னுடைய மானத்தைக் காப் பாற்றிக் கொள்ளுகிற சாதனமாகக் கருதி அவைகளை ஆடைகளாக ஆக்கிக்கொண்டிருந்தான். அந்தக் காலத்திலேயிருந்து பகட்டோடு பட்டாடைகளை உடுத்திக்கொள்ளுகிற இந்தக் காலம் வரையில் மனி தன், தன்னுடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள் வதற்கு உதவிய பெருந்தொழில், இந்த ஆடை நெய் கின்ற தொழில்தான் என்பதை யாரும் மறுக்க முடி யாது. அத்தகைய மானத்தைக் காப்பாற்றுகின்ற- ஆடை தருகின்ற-அருமைத் தொழிலாள நண்பர்கள் இன்றையதினம் எவ்வளவு வேதனைக்கு ஆளாகியிருக் கிறார்கள் ? எப்படி விசனக்கண்ணீர் வடித்துக்கொண் டிருக்கிறார்கள் என்பதை நாள்தோறும் ஏடுகள் மூலமாகவும்; அவர்களுடைய கூக்குரல் மூலமாகவும்; நாம் தெரிந்துகொண்டிருக்கிறோம். குளித்தலையிலே கைத்தறி வாரம் கொண்டாடப்படுவதைப் போலவே, சென்னையிலேயும் கொண்டாடப்படுகிறது. இதை விட ஆடம்பரமான- எழிலான மண்டபம் ஜோடிக்கப் பட்டு. அதிகமான பேச்சாளர்கள்--ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைவர்கள்-அமைச்சர்கள் வரவழைக்கப் பட்டு-நடன நிகழ்ச்சிகளும், நாடக நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஆனாலும் அங்கே கூடி, அந்த விழாவிலே கலந்து கொள்ளுகின்ற கைத்தறியாளர்கள் உற்சாகத்துட னிருக்கின்றார்களா?-என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை தங்களுடைய குறைகளை எடுத்துச் சொல் வதற்கு அமைச்சர்களை வரவழைத்து இருக்கிறோம்! அமைச்சர்கள் கேட்காவிட்டாலும்; வந்திருக்கின்ற 7 க -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/101&oldid=1703650" இலிருந்து மீள்விக்கப்பட்டது