உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. கழகம் கைத்தறியாளரின் துணைவன் ! கைத்தறிவாரம் கொண்டாடப்படுகிற இந்த நேரத்தில் கைத்தறி நெசவாளர்கள் களிப்போடும், குதூகலத்தோடும், பேருவகையோடும் இதில் கலந்து கொள்ளுகிறார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ய தமிழர்கள் - திராவிடர்கள் மானத்திற்கு மிக, மிக மதிப்பளிக்கக் கூடிய சந்ததியினர், அத்தகைய திரா விடப் பெருங்குடி மக்கள் முதலிலே இந்த நாட்டிலே நாகரீகம் உதயமான நேரத்தில், நாகரீகத்தோடும், மானத்தோடும் வாழ்வதற்காகத் தான் தங்களுடைய முதல் முயற்சியை எடுத்துக் கொண்டனர் என்பதை உலகவரலாறு-மனிதன் தோன்றிய காலத்திலிருந்து நாம் படிக்கும் வரலாறு நல்ல முறையிலே தெரிவிக் கின்றது. காடுகளிலும், குகைகளிலும், மரப் பொந்து களிலும், மலையடிவாரங்களிலும் மனிதன் வாழ்ந்த காலத்தில் - பச்சை மாமிசத்தை உண்ட நேரத்தில் - இனம், முறை, சாதி பாகுபாடு இவைகளெல்லாம் இல்லாத மனித சமுதாயமாக இருந்த நேரத்தில் - மனிதன் தான் உண்ணுவதற்கு உணவு எவ்வளவு அவசியம் என்று கருதினானோ; அதைவிட அதிகமாக மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற முயற்சிலே ஈடுபட்டான். இன்றைய தினம் மிகமிக எழில் தரக்கூடிய பட் டாடைகளையும், பருத்தி ஆடைகளையும் உடுத்துகின்ற மனிதன், அன்றைய தினம் அந்த அளவுக்கு நாகரீக க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/100&oldid=1703649" இலிருந்து மீள்விக்கப்பட்டது