உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 வளர்ச்சியைச் சீரழித்துவிட்டதால், கைத்தறி நெச வாளிகள் மிக மிகக் கஷ்டத்துக்குள்ளாகி இருக்கிறார் கள். அது மாத்திரமல்ல, கரைபோட்ட வேட்டி, சேலையை நெய்யும் உரிமையைக் கைத்தறிக்கு வழங் காதது மட்டுமல்ல - தறிக்கே உள்ள தனி உரிமை யான லுங்கி நெய்யும் உரிமையை இன்றைய தினம் ஆலைத் தொழிலுக்கு -மில் தொழிலுக்குத் தந்து விட்டார்கள். - - ya - ஒரு காலத்திலே தமிழகத்துக் கைத்தறித் துணிக்கு, உலகத்திலே இருந்த மதிப்பும், உலக வாணிபத்திலே இருந்த பெருமையும் இன்றைக் கெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கலாம்! சரித்திர மும் சொல்லிச் சொல்லிப் பெருமையடைகிறது. ஔரங்கசீப்பினுடைய மகள், தமிழ்நாட்டு ஏழு கைத் தறிச் சேலைகளை ஒரே நேரத்தில் உடுத்தியிருந் தாலும் அவளுடைய அங்கங்கள் வெளியிலே தெரிந்ததாம்! அவ்வளவு அவ்வளவு மெல்லிய ஆடைகளை நெய்து பெருமைபெற்றிருந்த தமிழகம் - ஒரு கணை யாழிக்குள்ளே, ஒரு சேலையை வைத்து மூடிவிட முடி யும் - பத்தீரப்படுத்திவிட முடியும் என்ற அளவுக்கு ஆடைகள் நெய்த தமிழகம் - பாம்பினுடைய தோல் ; அது உரித்துப் போடுகிறதே சட்டை ; அதைவிட மெல்லிய ஆடையைத் தரக்கூடும் என்ற பெருமை யைப் பெற்றிருந்த தமிழகம் இன்றைய தினம் வாடிக்கிடக்கிறது. ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் பெறுமான ஜரிகைச் சேலைகளை நெய்து தருகின்ற கைத்தறி நெசவாளி, தன்னுடைய மனைவிக்கு ஒரு ரூபாய் செலவழித்து துணி எடுத்துத் தரமுடியாத அளவுக்கு கந்தல் துணிகளையே அணிந்து, மனைவி - - த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/105&oldid=1703654" இலிருந்து மீள்விக்கப்பட்டது