உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மக்களுடன் வாழுகின்ற கொடிய வாழ்க்கையைத் தான் அமைத்துக்கொள்ள முடிகிறது பட்டு தரு கின்ற பட்டுப் பூச்சி வதைக்கப்படுவது போலவே; பட்டாடை தருகின்ற நெசவாளியும் வதைக்கப் படுகிறான். நான் இந்தத் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினன் என்ற முறையிலே எனக்குத் தரப்பட்டு இருக்கின்ற மனுக்கள் பலவற்றைப் படித்த நேரத்தில் அவைகளில் கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டிக் கொள்ள முடியாத நிலைமையில் - ஒரு வீட்டிலே பல குடும்பங்கள் நெருக்கியடித்துக் கொண்டு வாழு கிறோம்; அவதிப்படுகிறோம் ; கண்ணீர் வடிக்கிறோம் எங்களுக்கென வீடு கட்டிக்கொள்ளக்கூட உரிமை இல்லை; எவ்வளவோ காலி நிலங்கள், தரிசு இடங்கள் கிடக்கின்றனவே; அவைகளாவது எங்களுக்குப் பயன் பட உரிமை கிடைக்க அதிகாரிகளைக் கலந்து உறு துணை செய்வீர்களா?-என்று பல வேண்டுகோள்கள் என்னிடம் குவிந்திருக்கின்றன ! - இவைகளுக்கெல்லாம் காரணம் என்ன? இந்த நாட்டில் தொழிலாளர் வர்க்கம் சரியானபடி கவனிக் கப்படவில்லை. நாட்டு மானத்தைக் காக்கும் அவர் கள் நலனில் அக்கரை கொள்ள ஆளுங்கட்சியினர் தயங்குகிறார்கள். இந்தத் தயக்க நிலைமையிலே இருந்து இந்த நாட்டுக் கைத்தறி நெசவாளர்களை விடுவிப்பதற்கான முயற்சியிலே ஆட்சியாளர் ஈடுபட வேண்டும் என்பதைத்தான், இந்த விழாவில் நெச வாளர்களின் சார்பிலே சொல்லிக்கொள்ள விரும்பு கிறேன். Garage

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/106&oldid=1703655" இலிருந்து மீள்விக்கப்பட்டது