உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 108 அரசாங்கம் கொஞ்சங்கூடத் தங்கு தடையில்லாமல் - மிகவேகமாக விசைத்தறியைப் புகுத்திவிடும் காரியத் தில் ஈடுபட்டு வருகிறது. சுலபமாக கோவை நகரம்போன்ற இடங்களிலே விசைத் தறி மெள்ளப் புகுந்து கொண்டிருக்கிறது. அதன் காரணத்தால் வேலை வேண்டுமானால் முடியலாம். ஆனால். பல்லாயிரம் நெசவாளர்கள் பட்டினியால் சுருண்டு மடிந்து போவார்கள் என்பது மட்டும் நிச்சயம். மனிதனின் வேலையைக் குறைக் கின்ற-சிரமத்தைக் குறைக்கின்ற புதிய முறைகள்; புதிய விஞ்ஞான முறைகள் புகுத்தப்படக் கூடாது- என்கிற கருத்தை நான் அடிப்படையாகக் கொண்டு இதைக் கூறவில்லை கைத்தறி முறை இந்த நாட் டிலே இருந்துதான் தீரவேண்டும் என்றும் வாதாட வில்லை. கலையழகு மிக்க கைத்தறி ஆடைகளை அளிக் கின்ற சக்தி ஆலைகளுக்கு இல்லாததால் ...... பெரும் பாலோர் ஈடுபடுகிற தொழிலாக இல்லாமற் போயி னும், "கைத்தறி" அறவே நசித்துவிட யாரும் விரும்ப மாட்டார்கள். அது மட்டுமின்றி "தற்காலிகமாகக் கைத்தறியாளர்கள் - தறியை மட்டுமே நம்பி வாழு கின்ற பாட்டாளி மக்கள்-திராவிடப் பெருங்குடியினர் வாழ்வு பெற-தங்களுக்கென அமைத்துக் கொண்டி ருக்கிற தொழிலைச் சர்க்கார் அழித்துவிடாமல் பார்த் துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கூறு கிறோம். இந்தத் தொழிலே எப்போதும் நிரந்தரமாக இருக்கவேண்டும். கடல் உள்ள அளவும் - நிலம் உள்ள அளவும் - சூரிய சந்திரர்கள் உள்ள அளவும், "இந்தா விபீஷணா! லங்காபுரி ராஜ்யம்!" என்று கொடுத்தானாமே இராமன் விபீஷணனிடத்தில் லங்கா -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/108&oldid=1703657" இலிருந்து மீள்விக்கப்பட்டது