உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 - புரியை-அதைப்போல இந்த உலகம் உள்ள அளவும் கைத்தறிதான் இருக்கவேண்டும். மில் தொழிலையும், விஞ்ஞான முறைகளையும் எதிர்க்கிறோம் - என்று நாங்கள் சொல்லவில்லை நாங்கள் கூறுவதெல்லாம் தற்காலிகமாக கைத்தறி நெசவாளர்கள் கஷ்டப்படு கிறார்கள். அவர்கள் தங்களுக்கென அந்தத் தொழிலை ஆக்கிக் கொண்டார்கள். அந்தத் தொழிலை விட்டு விட்டு வேறு வேலையோ - தொழிலிலோ புகமுடியாத அளவுக்கு வழியற்றவர்களாகி விட்டார்கள். ஆகவே, அத்தகையோர் தற்காலிகமாக-அவர்களது சந்ததி வேறு தொழிலிலே ஈடுபடுகிற வரை வாழவேண் டாமா? அதற்கு வகைசெய்ய வேண்டாமா? என்று தான் கேட்கிறோம். - - திடீரென விசைத் தறி புகுத்தப்பட்டால் மில் துணிகளுக்கு ஆக்கமளிக்கப்பட்டால் - கைத்தறியை மட்டுமே நம்பி வாழுகின்ற பல்லாயிரம் குடும்பங் களின் கதி என்னவென்று கணக்குப்போட்டுப் பார்க் கச் சொல்லுகின்றோம். சர்க்காரும் அவர்களது கண் ணீரைத் துடைப்பதற்கான முழு முயற்சியை எடுத் துக்கொள்ள வேண்டும். இல்லையேல் கைத்தறியா ளர்கள் குடும்பம் குடும்பமாகச் சாகின்ற பாதகத் ற துக்கு - பழிக்கு சர்க்கார் தன்னை ஆளாக்கிக்கொள்ள நேரிடும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் க 90 கைத்தறி நெசவாளருக்காக செய்யப்படும் நன் மைகள் அத்தனையும் "அம்புலியைப் பிடித்துத் தா என்று கூறி அழுகின்ற பிள்ளையிடம்; " இந்தா பிடித்துத் தருகிறேன் "என்று தாயார் கூறி, ஒரு கண்ணாடியைக் கையிலே கொடுத்து, அதிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/109&oldid=1703658" இலிருந்து மீள்விக்கப்பட்டது