உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - 110 6 79 அம்புலியைக் காட்டி, " இதோ ! பார். அம்புலி என்று சொல்வதுபோல, "எங்களுக்கு உரிமைதர வேண்டும்; வாழ்வுதர வேண்டும் " என்று அழுகின்ற கைத்தறி நெசவாளர்களிடத்திலே, ஆட்சியாளர்கள் ஏதேதோ குருட்டு சமாதானங்களைச் சொல்லி “நாங் கள் உங்களுக்காக இன்னின்ன விழாக்களை நடத்து கிறோம்; கைத்தறி வாரங்களைக் கொண்டாடுகிறோம்; அவைகளிலே அமைச்சர்களாகிய நாங்களே கலந்து கொள்ளுகிறோம் என்கிற கண்ணாடியை மட்டும் காட்டுகிறார்கள். அழுகின்ற கைத்தறி நெசவாளன் இதனால் திருப்திபெற முடிகிறதா? அழுகின்ற நெசவாளி குடும்பம் - குடும்பமாகச் சாகின்ற நெசவாளி தற்கொலை செய்துகொள்ளுகின்ற நெசவாளி அத்தனை பேர்களும் அந்த வேதனை யிலிருந்து விடுபட வேண்டுமேயானால், வட நாட்டு ஆலைகளும், துணிகளும் ஒடுக்கும் நிலையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டுமே யானால், விசைத் தறி போன்ற திட்டங்களை வாபஸ்பெற்று - லுங்கி, கரைபோட்ட வேட்டி. சேலை நெய்கின்ற உரிமையைக் கைத்தறி நெசவாளருக்கே தருகின்ற சட்டங்களைத் துணிவோடு கொண்டுவர வேண்டும். ஆனால், நாம் பலமுறை கேட்டுவிட்டோம் - சட்ட மன்றத்திலும் கேட்டுவிட்டோம் - அந்தத் திட்டம் என்னவாயிற்று என்று? அதற்கு மௌனந்தான் பதிலாகத் தரப் படுகிறது. பேசா மடந்தைகளாகத்தான் மந்திரிகள் காட்சியளிக்கிறார்கள். கவர்னருடைய உரையிலும் அதைப்பற்றிய ஜாடைமாடை கூடக் காணப் படவில்லை.' - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/110&oldid=1703659" இலிருந்து மீள்விக்கப்பட்டது