உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க 114 களுந்தான் வைத்துக்கொள்ள வேண்டும்-என்று கூறுவது சுத்த சுய நலமாகிவிடும். அடுத்தவர்கள் சூடிக்கொண்டு "உன்னுடைய தோட்டத்து மலர் மிக மிக மென்மையான மலர். மிகமிக எழிலான ரோஜா!" என்று பாராட்டும்போது தோட்டக்காரனுக்கு ஏற்படு கிற மகிழ்ச்சி நண்பர் கிருட்டிணமூர்த்திக்கும் இப் போது ஏற்படவேண்டும். அது ஏற்படவும் செய்கிறது ஆனால், அதை மறைத்துக்கொண்டு என்னைக் குற்றம் சாட்டவேண்டும் என்பதற்காக வேடிக்கையுரை கூறி னார் என்று நான் கருதுகிறேன். இன்றைய தினம் என்னை வரவேற்று, இந்த விழாவினை ஏற்பாடு செய்தவர்கள் மிகமிக அழகான கலை நிகழ்ச்சிகளையும், கருத்துப் பொதிந்த இசை நிகழ்ச்சிகளையும் இந்த நாட்டுக்குத் தேவையான சீர் திருத்தக் கருத்துக்களையும், சிறு ஓரங்க நிகழ்ச்சி மூல மாகவும், நடனம் மூலமாகவும் எடுத்துக்காட்டினார்கள் மதுவிலக்கு நடன நிகழ்ச்சி நடைபெறுகிற நேரத்தில் நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுக் கொண்டேன். இந்த நாட்டிலே மதுவிலக்கு வந்து வெற்றிகரமாக நடைபெறுகிற - அல்ல; அல்ல; நடைபெறுவதாகச் சொல்லப்படுகிற - நேரத்தில் கூட இப்படி ஒரு நிகழ்ச்சி தேவைதானா? - என்று. ஆனால், அந்த நடன நிகழ்ச்சி இங்கே நடிக்கப்பட்டதிலிருந்து, இந்த நாட்டிலே மதுவிலக்கு சரியானபடி அமுலாகவில்லை என்பதும், மதுவிலக்கு சரியானபடி பெற்றிபெற வேண்டுமேயானால் மக்களின் மனத்தெளிவுதான் மிகமிக முக்யம் என்பதையும் இந்தப் பாசறையிலுள்ள பெண்மணிகள் ஜாடையாகச் சுட்டி காட்டியிருக்கிறார் கள் என்றுதான் நான் எண்ணிக்கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/114&oldid=1703663" இலிருந்து மீள்விக்கப்பட்டது