உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 பாடிய தோழியர் - மதுவிலக்கு நடனத்திலே பாட்டை மறந்துவிட்ட காரணத்தால் பாடியதையே திரும்பத் திரும்பப் பாடினார்கள் என்றாலும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற தலைப்பு "கலையும் மனி தனும் " என்ற காரணத்தால், அதையும் ஒரு கலை யாக நான் எடுத்துக் கொண்டேன். ஏனென்றால், அந்தப் பாட்டைத் திரும்பத் திரும்பப் பாடியவர் ஆண் வேடத்திலே இருக்கிற குடிகாரர். அவர் குடித் திருக்கிற காரணத்தால் தான் திரும்பத் திரும்பப் பாடினார் என்று நான் கருதினேனே தவிர, மறந்து விட்டார் என்று நான் எண்ணவில்லை. இது இந்த நாட்டிலே பரம்பரை பரம்பரையாகக் குற்றங்களைக் தவறுகளைக் கூட கலையுணர்ச்சியோடும். கலைக் கண்ணோடும் பார்க்கின்ற நிலைமை வளர்ந்து வருகிற தன்மையையுங் காண்பிப்பதாகும். கூட க - - - அவர் உதாரணமாக சென்ற மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. இராமனாதபுரத்தில் நடைபெற்ற ஒரு அமெச் சூர் நாடகத்துக்கு நான் தலைமைவகித்தேன். நாட கத்தை நான் காணுகிற நேரத்தில் அதில் பல நிகழ்ச் சிகளை மக்கள் அதிருப்தியோடு வரவேற்றார்கள் மிக மிகப் புதிய நடிகர்கள் மேடைக்குப் பழக்கமே இல்லாதவர்கள் என்கின்ற காரணங்களால் களிடையே அநேகக் குறைபாடுகள் காணப்பட்டன. அவைகளில் மிக மிக முக்யமான குறைபாடு என்ன வென்றால், அந்த நாடகத்திலே ஒரு முதலாளி வரு கிறார். ஆத்திரமடைந்த ஒரு தொழிலாளி ஒரு புரட் சிக் கட்டத்தின்போது தன் கையிலே உள்ள தடியால் அந்த முதலாளியின் தலையிலே ஓங்கி அடிக்கிறான். முதலாளி சுருண்டு கீழே விழுந்தார். உடனே நாடக க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/115&oldid=1703664" இலிருந்து மீள்விக்கப்பட்டது