உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 116 டெக்னிக்படி விளக்குகள் அணைக்கப்பட்டு, திரை கீழே விடப்பட்டது. திரை விழுந்த பிறகு விளக்கு போட்டார்கள் அடுத்த சீனுக்காக. ஆனால், விழுந்த திரை முழுவதும் விழவில்லை ஆனாலும் மக்களுக்கு நேராக இறந்துவிட்டதாகக் காட்டப்பட்ட முதலாளி திடீரென்று எழுந்து உள்ளே ஓடினார். அவர் ஓடு வது விளக்கு போடப்பட்ட காரணத்தால் மக்களுக் குத் தெரிந்தது; ஓடுகிற நேரத்திலே, "ஐயோ! எழுந்துவிட்டானே" என்று பயந்துகொண்டு திரை விடுகிற சீன்காரன் மறுபடியும் திரையை விட்டான்; அது ஓடிய முதலாளியின் தலையிலே விழுந்து அடி பட்டு மீண்டும் முதலாளி வேடக்காரன் கீழே விழுந் தான். மக்கள் நகைச்சுவைக்கு நல்ல கட்டம் கிடைத் தது என்று கருதவே நாடகக் கொட்டகையில் சிறு சிறு கூச்சலும், குழப்பமும் தொடர்ந்தது. அதற்குப் பிறகு நான் அவசர அவசரமாக நாடகமேடைக்குச் சென்று தலைமையுரையை நானே வலுவிலே ஆற்றத் தொடங்கினேன். அப்போது மக்களிடையே சொன் னேன். நீங்கள் ஏதோ தவறுதலாகப் புரிந்து கொண்டீர்கள். இந்த முதலாளியைத் தொழிலாளி அடித்தான். அடிபட்ட முதலாளி கீழே விழுந்து செத்தான். செத்த பிறகு மறுபடியும் உயிர்பெற்று எழுந்தான். ஓடுகிற நேரத்திலே திரைக் கம்பு தலை யிலே விழ மறுபடியும் கீழே விழுந்தான் அது எதற் காக வென்றால், ஏதும் தவறுதலாக நடந்துவிட வில்லை. தொழிலாளி அடித்துங் கூடச், சாகாத முத லாளி, மறுபடியும் மறுபடியும் இந்த முதலாளி வர்க் கம் சாகாது என்று காட்டுவதற்காக எழுந்தார் ; அப் படி எழுந்தாலும் இந்த உலகம் அவர்களை விடாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/116&oldid=1703665" இலிருந்து மீள்விக்கப்பட்டது