உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 என்று காட்டுவதற்காகத் திரைக் கம்பு மேலே விழுந் தது. இப்படித்தான் நாம் விளக்கம் பெறவேண்டும் என்று எடுத்துக் காட்டினேன். ஆகவே, தவறுகளையும் - - குறைகளையும்கூட DOCOMO - கலைக் கண்களோடு பார்க்கின்ற தன்மை தமிழருக் குரிய மிக மிக நல்ல வழக்கமாக இருக்கிறது. அதற் காகத் தவறுகளையே கலைக் கண்களோடு பார்த்து, அப்படிப் பார்க்கிற காரணத்தால் தவறுகளை எல்லாம் சரியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்பதும் முழுவதும் ஒப்புக்கொள்ளக் கூடிய தல்ல. இம்மாதிரி யான தவறுகள் மன்னிக்கக் கூடிய பிழைகள் நமக்கு நாமே சரி செய்துகொள்ளக் கூடியவைகள். சமுதாயத்திற்கும், அறிவுக்கும் கேடு பயக்கக் கூடிய தவறுகள் பலவற்றை கலைக் கண்ணோடு நோக்கி நாட்டுக்கே தீமையை உண்டாக்குகிற மனப்பான்மை தொலையவேண்டு மென்பதிலே அக்கரை கொண்ட வன் நான். எனக்குத் தரப்பட்ட தலைப்புக்கு ஒத்து வருகிற காரணத்தால் இதைக் குறிப்பிடலானேன். மச - எனக்குத் தரப்பட்டிருக்கிற தலைப்பு "கலையும் மனிதனும் என்பது-இந்தத் தலைப்பு பல இடங் களிலே தருவதுபோல நானே தந்த தலைப்பு அல்ல. இந்தப் பாசறையில் உள்ளவர்கள் தந்த தலைப்பாகும் இந்த உலகத்து உயிர்ப்பொருள்கள் அத்தனையிலும் மனிதன் ஒருவன்தான் கலையை உணருகிறவன்; அச்சக்தி படைத்தவன்; கலைகளைப் பலவிதமாகப் பாகுபடுத்தி - அப்படிப் பாகுபடுத்திய கலையிலே ஓவி யக்கலை. சிற்பக்கலை, இலக்கியக்கலை என்று மிகமிக நுட்பமாக ஆராய்கிறவன் மனிதன் ஒருவன் தான். 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/117&oldid=1703666" இலிருந்து மீள்விக்கப்பட்டது