உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 و கருணாநிதியின் கருத்துக்களுக்கும், திராவிட முன் னேற்றக் கழகத்தின் கருத்துக்களுக்கும், என்னுடைய கருத்துக்களுக்கும் இன்னின்ன வேறுபாடுகள் இருக் கின்றன. உங்களுக்கு எந்தக் கருத்துத் தேவை? என்று கேட்டுத்தான் ஆகவேண்டுமே தவிர - மக்களை விலைபேசி விடலாம்; வோட்டுகள் சாதாரணமானவை விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்ற நினைப்பில் இனிமேல் தேர்தல் நடைபெற முடியாது என்பதற் கான அறிவிப்பு தான் இந்தப் பொதுத்தேர்தல் எத்தனையோ லட்சம் லட்சமாகப் பணத்தைச் செலவழித்தவர்கள் எல்லாம், தேர்தல் முடிந்தபிறகு கணக்கைப் பார்த்துவிட்டு, "இனி இந்தத் தேர்தல் நமக்குத் தேவையே இல்லை" என்று கருதி-காம ராசரே வந்தால்கூட ஆயிரமோ, இரண்டாயிரமோ தந்துவிடுகிறேன் காங்கிரசுக் கட்சிக்கு பத்தாயிரம் தந்துவிடுகிறேன் என்னை விட்டால் போதும்" என்று சொல்லப் போகின்ற பணக்காரர்களை நாம் பார்க்கத் தான் போகிறோம். இனி அவர்கள் காங்கிரசை நம்பி வரமாட்டார்கள். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் எதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்தத் தேர்தலில் ஈடு பட்டதோ, அந்தக் குறிக்கோளிலே கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. நான் விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்ட நூற்றிருபது இடங்களிலும் காங்கிரசைச் சந்தித்தது. அதைப்போலவே நாற் பத்துமூன்று இடங்களில் கம்யூனிஸ்டுகளையும், இரு பத்தாறு இடங்களில் காங்கிரசு சீர்திருத்தக் கட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/12&oldid=1703199" இலிருந்து மீள்விக்கப்பட்டது