உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 யைக் கண்டதும் பக்கத்திலே மரங்களிலே இருந்த பசுங்கிளிகளெல்லாம் ஓடிவந்து அந்தத் திராட்சைப் பழத்தைக் கொத்த ஆரம்பித்தன. அவைகளுக்கு அது ஓவியம் என்று தெரியவில்லை. அவ்வளவு இயற் கையாகவே எழுதியிருந்தான். அதைக் கண்ட ஓவி யன் சுக்ஸிஸ், பாராசியஸ் என்கின்ற மற்றவனைப் பார்த்து, "பார்த்தாயா, என்னுடைய மகத்துவத்தை ? திராட்சைக்கும் ஓவியத்திற்கும்கூட வித்தியாசம் தெரி யாத கிளிகள் பறந்து வந்து கொத்துகின்றன, இதை மிஞ்சுகின்ற உன்னுடைய ஓவியம் எங்கே ? " என்று இறுமாப்போடு கேட்டான். உடனே, பாராசியஸ் அவனைக் கூப்பிட்டு " எங்கே என்று கேட்கிறாயா ? அதோ இருக்கிறது என்னுடைய ஓவியம்! அந்தத் திரைச் சீலையை நீக்கிவிட்டுப் பார்!" என்று சொன்னான். உடனே திராட்சைக் குலையைத் தீட்டிய ஓவியன் ஓடோடிச் சென்று தூரத்தில் இருந்த திரைச் சீலையை நீக்கி னான். ஆனால் நீக்க முடியவில்லை, அந்தத் திரையே ஒரு ஓவியமாக இருந்தது. அத்தகைய ஓவியர்களது பரம்பரை - கிரேக்கத்திலிருந்து வளர்ந்த அந்தப் பரம்பரை, உலகத்திலே, நாலா பகுதிகளிலேயும் பர வியது. தமிழகத்திலும் அத்தகைய ஓவியர்கள் இருந் தார்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். அப்படிப் பட்ட ஓவியர்கள் இயற்கைக்கு முரண்படாத ஓவியங் களைத் தீட்டினார்களா என்றால், ஒரு சிலர் தீட்டினார் கள்: மிகப்பலர் இயற்கைக்கு முரண்பாடான ஓவியங் களைத்தான் கலை வடிவத்திலே மக்களுக்குத் தந்தார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/122&oldid=1703671" இலிருந்து மீள்விக்கப்பட்டது