உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 இங்கே இருக்கின்ற பெண்மக்கள் சேரிக்குச் சென்று, அங்கே, நாகரீகமற்று இருக்கின்ற ஆதிதிராவிடப் பெண்மணிகளையும், அவர்கள் வீட்டு அரும்புச் செல் வங்களையும், அழைத்து நிறுத்தி, பரட்டையாக இருக் கின்ற தலைகளிலே எண்ணையிட்டு, சீவி, அவர் களுடைய கருத்திருக்கிற முகங்களிலே அழகான பொட்டுகளை இட்டு, நல்ல வெள்ளை உடைகளை உடுக்கச் செய்கிறார்கள் என்றால் அதிலே சுத்தமாக இருக்க வேண்டுமென்பது மாத்திரம் பொதிந்து கிடக்கவில்லை. அங்கே கலையழகும் மின்னுவதைக் காண்கிறோம். ஆகவேதான், "கலையும் - மனித னும்" என்ற தலைப்பு. மனிதன் கலையம்சத்தோடு தான் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது. க 99 99 கிரேக்கத்திலே ஓவியக்கலை பன்னெடு பன்னெடு நாட் களுக்கு முன்பு நல்ல முறையிலே பரவி வளரத் தொடங்கியது. அங்கு இருந்த ஓவியர்கள் இயற் கைக்கு முரண்படாத அளவிலே ஓவியங்களைத் தீட் டிக் காட்டினார்கள். நம் நாவலர் அவர்கள் தீட்டி யுள்ள "பண்டைக் கிரேக்கம் எனும் நூலில் கிரேக் கத்திலே இருந்த ஓவியர்களிலே சிறப்பு வாய்ந்த இரு சுக்ஸிஸ்; பாராசியஸ் என்கின்றவர் களிடையே ஒரு காலத்திலே போட்டியே ஏற்பட்டது எனக் குறிப்பிடப்படுகிறது. என்ன போட்டி ? ஓவி யம் வரைவதிலே யார் நிபுணன் என்கிற பெரிய தொரு போட்டி! போட்டிக்காக, ஒரு பெரிய மன் றமே அமைக்கப்பட்டது. ஒருவன் ஒரு அழகான திராட்சைக் குலையை எழுதிக் காட்டி அதை மன்றத் திலே தொங்கவிட்டான். எழுதிய திராட்சைக் குலை வரான .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/121&oldid=1703670" இலிருந்து மீள்விக்கப்பட்டது