உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி முரசமாகவும் Conn 120 மகிழ்ச்சி நாட்களைக் கொண் - டாடுகின்ற மங்கல முரசமாகவும் — பயன்பட்டது என் பதை நாம் அறிகிறோம். இதற்குக் காரணம் மனிதன் சிந்தித்தான். அந்த சிந்தனையிலே விளைந்த கலைஉணர்வு காய்ந்த தோலை ஒரு பொருளிலே கட்டச்செய்தது. கட்டப்பட்ட தோல் கடைசியிலே முரசமாக மாறியது. ?" மூங்கில் கம்பிலே வண்டு துளைக்க-துளைத்த காரணத்தால் துவாரங்கள் ஏற்பட -அந்தத் துவாரங் களிலே தென்றல் நுழைய - நுழைந்த தென்றல் அங்கிருந்து வெளிக்கிளம்பிப் போகிற நேரத்திலே ஒரு ஒலி உண்டாக-"இது எப்படி உண்டாகிறது என்று யோசித்துப்பார்த்து, காதை வைத்துக்கேட்டு அந்த ஒலி எங்கேயிருந்து வருகிறது என்று ஆராய்ந்து மூங்கில் குழாயில் காற்று நுழைந்து வெளி வருகிற காரணத்தால் அதிலிருந்து ஒலி உண்டா கிறது என்று கண்டுபிடித்து அவனும் அதைப்போல மூங்கில்களை வெட்டி, துளைபோட்டு, தன்னுடைய வாயில் வைத்து, அதை ஊதிக்காட்டிய நேரத்தில் அங்கிருந்து நாதம் எழும்பியது ! ஒலி கிளம்பியது !! அதையே அவன் குழலாக புல்லாங்குழலாக மாற் றிக் கொண்டான். - ய இப்படி இயற்கையைக் கண்ட மனிதன், அதிலே கலையம்சத்தையும் சேர்த்த காரணத்தால், மக்களுக்குத் தேவையான பலபல நல்ல பொருள்களைத் தரக்கூடிய அளவுக்குப் பக்குவம் பெற்றான். மனிதன் கலா உணர்ச்சியோடு வாழுகிற நேரத் தில் தான் அவன் மற்றவர்களோடு பழக முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/120&oldid=1703669" இலிருந்து மீள்விக்கப்பட்டது