உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 தேவைப்பட்டது. அவனது வயிற்றுப்பசி அடங்கிய பிறகு, அவன் சிந்திக்கத்தொடங்கினான். சிந்திக்கத் தொடங்கிய காலத்திலேயே, கலையுணர்வும் அதோடு சேர்ந்து எழத்தொடங்கி விட்டது. நீங்கள் படித்திருக் கலாம் சிலர் - கேட்டிருக்கலாம் பலர்; இன்று நாம் காணுகிற பலபல அதிசயப்பொருள்களுக்கெல்லாம் வித்திட்டதுபோல பழைய கலையுணர்ச்சியோடு கூடிய நாகரீகங்கள் அந்தக் காலத்திலேயே தோன்றியிருக் கின்றன. - - -- மனிதன் ஒரு மிருகத்தை வேட்டையாடித் தின்று விட்டு அதன் தோலை ஒரு மரத்திலே போட்டிருக் கிறான் காயவைப்பதற்காக என்று அங்கு அவன் போடாவிட்டாலும், ஏதோ அங்கு போடு வோம் என்று வீசி எறிய -- அந்தத் தோல் நன்றா கக் காய்ந்து -- காற்றடித்த காரணத்தால் மரக் கிளை பட்டு பட்டு -- படுகிற நேரத்திலே ஒரு ஒலி உண் டாக -- அதைப் பார்த்துக்கொண்டிருக்கிற மனிதன் அந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சிந்திக்கிறான். அதன் பிறகு அத்தகைய தோல்களை தானே காயவைத்து, கொம்புகளைத் தானே ஒடித்து, காய்ந்து இருக்கிற தோலிலே தானே தட்டிப்பார்த்து ஒலி உண்டாக்கு கிறான். பிறகு அப்படி ஒலி உண்டாகிற காய்ந்த தோலை இன்னொரு பொருளிலே கட்டி -- மரக் கிளை யினால் அடித்து, அடித்து ஒலி உண்டாக்கினான். அது தான் பறையாக போர்முரசாக-ஒரு காலத்தில் அரசர்கள், பகைவர்கள் தங்கள் நாட்டின்மீது படை யெடுத்து வருகின்ற நேரத்தில், மற்றவர்களுக்கு அறி விக்கின்ற முரசமாகவும்; இன்னொரு நாட்டிலே பெற்ற வெற்றியை நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்ற - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/119&oldid=1703668" இலிருந்து மீள்விக்கப்பட்டது