உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 133 இவன் அனுமதிக்கப்படுவானே யன்றி ஆட்சியை மாற்றியமைக்க வேண்டுமென்ற ஆணவ எண்ணமும் அதன் காரணமாக மிருக வெறிப் போராட்டமும் தோன்றுவதற்கு ஒருக்காலும் இடந்தராது இந்த ஆட்சிபீடம். ஆகவே, - - 'புனிதமான நாட்டுக் கொடியைக் கிழித்தது போற்றுதற் குரிய நாட்டுப் பாடலை எரித்தது - பெருமைக் குரிய சட்டத்தை நெருப்பிலிட்டது - மாமன்றத்தைப் பாழாக்கியது கச ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தது — ஆகிய இத்தனை பயங்கர நடவடிக்கைகளையும் தூண்டிவிட்ட குற்றம் விடுதலை இயக்கத்தின் தலை வனாகிய இவனையே சேருகிறது-அதனால் இவன் தண்டிக்கப்பட வேண்டியவன் - தலை துண்டிக்கப்பட வேண்டியவன். உரையை 'ஆ வேசமும் துடிப்பும் மிகுந்த முடித்துவிட்டு நீண்ட பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்தார் மன்றப் பெரியவர். தும்பை மலர்போல வெளுத்து தொப்பூழ்வரை தொங்கிக் கொண்டிருக்கும் அழகிய தாடி. நீண்ட பெரு மூக்கு. அகன்ற கண்கள்! விரிந்த புருவம்! ஏறிய நெற்றி! ஏறு நடை! இளைஞனின் குரல்! இவ்வளவு லட்சணங்களும் கொண்ட அந்த முதியவர் தான் மன்றத்தின் மரியாதைக்குரியவர். அவரது நீண்ட பேச்சுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட விடுதலைத் தலைவன் பேசவேண்டும்.. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/133&oldid=1703682" இலிருந்து மீள்விக்கப்பட்டது