உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க வேண்டும். தவறினால் மன்றம் அவனுக்கு மரண தண்டனை வழங்கத் தயாராக இருக்கின்றது. அவன் என்னதான் முயன்றாலும் தன்னை நிர பராதி என்று சாதிக்க முடியாது. நியாயம் அவன் பக்கமிருந்தாலும்-நீதியின் தராசு அவன் பக்கம் சாய்ந்திருக்கவில்லை. அது அவனைத் தவறாகவே எடை போடத் தயாரிக்கப்பட்டுவிட்டது. மன்றத்துப் பெரியவராம் முது கிழவர். அவனைப் பற்றிய குற்றங்களை அடுக்கிக் காட்டி அவன் தண்ட னைக்குரியவன் என்று வாதிடும்போது ஏனோ தெரிய வில்லை; அந்தக் கூண்டிலே நிற்கும் வீரனின் விழி களிலே நீர் ததும்பியது, அவன் இறுதியாக பேச ஆரம்பித்தான். "அவையோரே! அவையோரே! இந்த அவையில் நாட்டுப் பிரதிநிதிகளில் ஒருவனாக அமர்ந்திருந்த நான், இன்றையதினம் கூண்டிலே நிறுத்தப்பட்டு- கோர விளையாட்டுகளுக்குக் காரணம் நானேதான் என்று குற்றம் சாற்றப்பட்டு "என்ன தண்டனை?” என்பதை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். மன்றத்துப் பெரியவர் என்மீது தூண்டுதல்-பலாத்காரம்- மிருக வெறிச் செயல்- ஆகிய குற்றங்களைச் சுமத்தியிருக்கிறார். நாடு உங்கள் கையிலே யிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற எண்ணத்தை இந்த மன்றத்தில் பலமுறை வெளி யிட்டிருக்கிறேன். அதற்குப் பதிலாக உங்களுடைய கேலிப் பேச்சையும் - இழிவும் பழியும் மிகுந்த உரை ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/134&oldid=1703683" இலிருந்து மீள்விக்கப்பட்டது