உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 களையும் கேட்டிருக்கிறேன். சட்டத்தை மீறாத அள வில் எனது வாதங்களை எடுத்துரைத்து-எதிர்காலத் தைப் பற்றிய எச்சரிக்கையும் விடுத்து-நாட்டி சுதந்திரக்கனல் மூண்டெழுகிறது; விடுதலை உணர்வு அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உடைப்பெடுக்கிறது -என்ற அறிவிப்பையும் காலா காலத்தில் தந்திருக் கிறேன். விடுதலை வேட்கை கொண்ட கொண்ட மக்களின் எழுச்சியை அலட்சியப்படுத்தினால் ஆபத்தை அணைத் துக்கொள்ள நேருமென்றும் அறைகூவல் விடுத் திருக்கிறேன். அமைதியும் சமாதானமும் கலந்த கையிலேயே நாட்டுக்கு சுதந்திரத்தை அளித்து விட்டுப் போய்விடுங்கள் - அதுவே உங்களை உலகம் போற்றுவதற்குரிய சாலச்சிறந்த உபாயமாக யிருக்கு மென்றும் எடுத்துக் காட்டியிருக்கிறேன். "எங்கள் நாட்டில் பிறர் ஆட்சி கூடாது!" "எமது வேண்டும்". மண்ணில் எமது கொடியே பறக்க "எமது கொற்றமே நிலவ வேண்டும்". "எமது சட்டமே அமுலாக வேண்டும்!" “எமது வளத்தை யாரும் பறிக்க உரிமை கிடை யாது"- என்ற முழக்கத்தைக் கேட்டுக் கேட்டு இந்த மன்றத்தின் சுவர்களெல்லாம்கூட ஆட்டம் கொடுத் திருக்கின்றன. அறிவீர்கள் அத்தனையும். ஆனால் ஒன்று. அவையோர்களே! நான் உரிமை முழக்கமிடும் போதெல்லாம் என் பேச்சில் எள்ளளவு பலாத்கார வாடையும் வீசக் கண்டிருக்க மாட்டீர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/135&oldid=1703684" இலிருந்து மீள்விக்கப்பட்டது