உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நீங்கள்! ஆனால் என் தலைமையில் நடைபெற்ற அறப் போரில் போரில் உங்கள் கொடிகள் கொளுத்தப் பட்டன-உங்கள் சட்டம் தீயிடப்பட்டது- உங்கள் மாளிகைகள் சீரழிக்கப்பட்டன - அதற்காக நான் மிக மிக வருந்துகிறேன். எனக்கும் அந்த நிகழ்ச்சிகளுக் கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்று நான் கூறுவது தண்டனையிலேயிருந்து தப்பித்துக்கொள்வ தற்காக அல்ல. அல்லது உங்கள் கொடியையும் சட்டத்தையும் நான் புனிதமாய்ப் போற்றி அதன் கீழ் வாழவேண்டுமென்று விரும்புகிறேன் என்ற பொருளை யும் நீங்கள் யாரும் தவறாகக்கொண்டு விடக்கூடாது. உங்கள் கொடியை மதிப்பேன்-அது உங்கள் நாட்டுக்கோட்டையிலே பறந்து, எங்கள் நாட்டுக் கொடியோடு உறவாடும்போது. உங்கள் சட்டத்துக்கு மரியாதை தருவேன்-அது உங்கள் நாட்டு மாமன்றத்திலே அனுஷ்டிக்கப்பட்டு எங்கள் நாட்டுக்குத் தனிச்சட்டம் அமைந்துவிட்டதை ஆமோதிக்கிற நேரத்திலே. இவைபோன்ற மாறுதல்கள் ஏற்படாத வரை யிலே உங்கள் கொடியும் சட்டமும் என் நாட்டுக்கும் எனக்கும் உகந்ததல்ல- அவை கொளுத்தப்பட்டதற் காக வருந்துகிறேன். ஆனால்,கொ ஆனால், கொளுத்தப்படக் கூடாத உயர்ந்த பொருள்கள் அவை என்று நான் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை! கொளுத்தியவர்கள் - வெறிச் செயல்கள் நடத்தி யவர்கள் யார்? என் தலைமையில் இயங்கும் விடுதலைப் படையைச் சேர்ந்தவர்களா? அல்ல: அல்ல! ஆனா °

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/136&oldid=1703685" இலிருந்து மீள்விக்கப்பட்டது