உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 'சத்து இருபத்திரண்டாயிரத்து நூற்றறுபதுதான் ஆகும். அது மாத்திரமல்ல, அந்த இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றிகள் ஆறு. கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வெற்றிகள் மூன்று தான். இதிலிருந்து என்ன தெரிகிறது? காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகந் தான் என்பது நிரூபணமாகி விடவில்லையா? நூற்றிருபது இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வோட்டுகள் ஏறத்தாழ பதினேழுலட் சம் என்றால் - இன்னும் மிகுதியாயிருந்த எண்பது இடங்களிலும் நாம் அபேட்சகர்களை நிறுத்தியிருப் போமேயானால்-மொத்தமாக காங்கிரசு ஐம்பதுலட்சம் வோட்டுகள் பெற்றிருக்கிறது என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயம் முப்பதுலட்சம் வோட்டு கள் பெற்றிருக்க முடியும் என்றுதான் இந்தக் கணக்கு நமக்குக் காட்டுகிறது. ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகந்தான் இரண்டாவது பெரிய கட்சி என்பது உறுதியாகிவிட் டது. இதை நாம் மட்டும் சொல்லவில்லை. "மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு" என்று நாம் வர்ணிப்போமே அந்த 'ஹிந்து'ப் பத்திரிகை தலையங்கத்திலேயே குறித்துவிட்டது. "கல்கி" ஏடு எழுதுகிறது. "ஆனந்த விகட"னும் எழுதுகிறது. "சுதேசமித்திரனும்' ஒப்புக் கொள்ளுகிறது, பாராளு மன்றத்திலே செயலாள ராக இருந்து அனுபவ மிக்கவரான கிருஷ்ணய்யரே சொல்லுகிறார். 'வலுவான இரண்டாவது கட்சி திராவிட முன்னேற்றக் கழகந்தான்" என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/14&oldid=1703201" இலிருந்து மீள்விக்கப்பட்டது