உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 காங்கிரசு ஏறத்தாழ அறுபது ஆண்டு காலமாக இந்த நாட்டிலே வாழுகிறது. அறுபது ஆண்டுகால அனுபவம் மிக்க கட்சி - சஷ்டியப்தபூர்த்தி கொண் டாடிய கட்சி - பலப்பல ராஜதந்திரிகளையும், தேர்தல் தந்திரிகளையும் கொண்டிருக்கிற கட்சி - ஐம்பது லட் சம் வோட்டுகளைத்தான் பெற முடிந்தது. ஆனால், எட்டு ஆண்டுகள் தான் திராவிட முன்னேற்றக்கழகத் தின் சரித்திரம். அப்படி எட்டாண்டு காலம் அரசியல் ரீதியில் வளர்ந்த கழகம் - அந்தக் குறுகிய கால அனுபவத்தில் - எடுத்த எடுப்பிலேயே - முதல் தேர் தலிலேயே பதினேழு லட்சம் வோட்டுகளைப் பெற்று விட்டதென்றால், அடுத்த தேர் தலில் இந்நிலைமை எப்படியாக வளரும் என்பதைச் சற்று நினைத்துப் பார்க்கவேண்டுகிறேன். வ நாங்கள் எதிர்பார்த்தது நாற்பது வெற்றிகளை ஆனால் கணக்கு கொஞ்சம் தவறிவிட்டது. பதினைந்து இடங்களே தான் பெற முடிந்தது. மற்ற இருபத் தைந்து இடங்களில் தோற்றோமென்றால் பெருமளவு வோட்டுகள் பெற்றே தோற்றிருக்கிறோம். சேலம், லால்குடி, விழுப்புரம், ஆம்பூர், போன்ற இடங்களின் முடிவுகள் அதைத்தான் உணர்த்துகின்றன. மந்திரி ராமசாமி நாற்பத்திரண்டாயிரம் வோட்டுகள் பெற்றார். எதிர்த்து நின்ற மாணவர் ; இன்னும் படித்துக்கொண்டிருப்பவர் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் நாற்பதினாயிரம் வோட்டுகள் பெற்றி ருக்கிறார். மயிரிழையில் தப்பி விட்டார் இந்த மந்திரி யார். இந்த முறையில் வெற்றிப்பாதையில் அடி யெடுத்து வைத்து - பாசி சருக்கிவிட்ட காரணத்தால் அடியோடு கீழே விழுந்து விடாமல் பக்கத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/15&oldid=1703202" இலிருந்து மீள்விக்கப்பட்டது