உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கிடைத்த ஒரு கொடியையோ, கொம்பையோ பிடித் துக் கொண்டு தப்பி விட்டதைப்போல அபரிமிதமான வோட்டுகளைப் பெற்றுத்தான் தோற்றிருக்கிறோம். எடை காங்கிரசு வட்டாரத்திலேகூடப் பேசிக்கொள்ளு கிறார்களாம், திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் எடை போட்டது பெருந்தவறு. அவர்கள் நல்ல கொண்டவர்கள் தான். வலுவுடைய கட்சி தான்!' என்று. வேண்டுமானால் திராவிடர் கழகத் தோழர்கள் மட்டும் பேசலாம்; இனியும் பேசலாம்- இன்னும் ஐந்தாண்டுகள் வரை பேசிக்கொண்டே இருக்கலாம். - அவர்களுக்கு இதைத் தவிர வேறு வேலை கிடையாது. திராவிடர் கழகப் பெருந் தலைவர் களில் ஒருவர்கூடக் குறிப்பிட்டாராம் “இந்தத் திராவிட முன்னேற்றக் கழகப் பயல்கள் ஒருக்காலும் பதினைந்து இடங்களைக்கூடப் பெறமுடியாது. அப்படி வந்துவிட்டால், என் பாரியாளையும், மகளையும் நடுத் தெருவிலே 'எப்படியோ நிறுத்தி வைக்கிறேன்" என்பதாக. இப்படி மிக மிகக் கேவலமான முறை யில் கீழ்த்தரமான வகையில் திராவிட முன் னேற்றக் கழகத்தின் கொள்கைகளையும், அதன் பாசறை அமைப்பையும் புரிந்துகொள்ளாது பேசப் பட்ட சொற்கள் தேர்தல் காலத்தில் இந்த நாட்டில் - ஏராளம். - எனக்கு முன்னால் பேசிய சிவராசு குறிப்பிட் டார், எனது வெற்றி பெரியாரின் வெற்றியென்று உண்மைதான். தெரிந்தோ தெரியாமலோ இது பெரியாருக்கான வெற்றிதான். ஏனெனில், நம்மை ஆளாக்கிவிட்டவரும், பெரியார்தான்! இன்று அழிக் கப் புறப்பட்டிருப்பவரும் பெரியார் தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/16&oldid=1703203" இலிருந்து மீள்விக்கப்பட்டது