உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அகற்றப்படவேண்டிய காலம் வந்துவிட்டது ; இன் று எங்கள் முயற்சியில் நாங்கள் தோற்றுவிடலாம் நாளை, அல்லது மறு நாள் நிச்சயமாக இந்தக் கோட் டையில் எங்கள் நாட்டுக் கொடிதான் பறக்கும். எங் களை அடிமைப்படுத்தும் கொடி நீண்ட நாள் பறக்க முடியாது. இந்த உறுதி நிறைந்த நம்பிக்கையோடு, உங்கள் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறேன். - -கூண்டிலே விடுதலை வீரன் இவ்வாறு முழக்க மிட்டு நின்றான். அவையினர் ஒருமுகமாகக் கூறினர். 'இவனைத் தூக்கிலிடுக" என்று. அதற்குள் - மன்றத்துக்கு வெளியே போர் முரசு ஒலித்ததை அனைவரும் திகைப்போடு கேட்டனர். $ 'விடுதலை! விடுதலை!!" என்ற ஒலி வானைப் பிளந்தது. - 99 அடுத்த நாட்டுப் படை ஓட்டம் பிடித்தது நாடே ஒன்று கூடி விடுதலை முழக்கம் செய்கிறது என்ற செய்தியுடன் காவலன் உள்ளே நுழைந்து கீழே விழுந்து மாண்டான். முரசொலி வேகமாயிற்று. மன்றத்துக்குள் மக்கள் புகுந்தனர் மடை திறந்த வெள்ளம் போல விடுதலைத் தலைவன் காப்பாற்றப்பட்டான். மன்றம் மக்களால் வளைக்கப்பட்டது. கோட்டையிலே புதிய கொடி ஏற்றப்பட்டது புதிய சுதந்திர கீதம் இசைக்கப்பட்டது. அதுதான் நம்பிக்கை நட்சத்திரம். ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/140&oldid=1703689" இலிருந்து மீள்விக்கப்பட்டது