உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் தாரீர் ய தமிழ் நாட்டில் துறைமுகங்கள் தேவை என்று முன்பெல்லாம் வெள்ளைக்கார துரை முகங்களைப் பார்த்துக் கேட்டோம். இன்றைய தினம் நம்முடைய நாட்டு மந்திரிமார்களுடைய முகங்களைப் பார்த்து தமிழகத்தில் துறைமுகங்கள் நிரம்ப நிரம்ப வேண்டு மென்று கேட்கின்ற நிலைமையிலே இருக்கிறோம். தமிழகத்தில் ஒரு காலத்திலே எந்த அளவுக்கு நல்ல துறைமுகங்கள் இருந்தன என்பதையும், அத்தகைய துறைமுகங்கள் வாயிலாக யவனத்திற் கும் கிரேக்கத்திற்கும் தமிழகத்தினுடைய மயில் இறகு, மிளகு போன்ற பொருள்கள், தமிழகத்தினுடைய சிறப்பான முத்துக்கள் எந்த அளவுக்கு ஏற்றுமதி யாயின என்பதையும் நம்முடைய வரலாறுகள் விளக்கி நமக்குப் பெருமை அளித்துக்கொண்டிருக்கின்றன. காவிரிப் பூம்பட்டணம் என்று இன்றைய தினம் வழங்கப்படும் ஊர் பூம்புகார் என்று வழங்கி வந்தது. நான் பூம்புகார் என்று சொல்லும்போது ஒருசில ருக்கு நான் ஏதோ "புகார்" கூறுகிறேன் என்று கூடத் தோன்றலாம். 66 நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்துணையும் காழகத் தாக்கமும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/141&oldid=1703690" இலிருந்து மீள்விக்கப்பட்டது