உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று 142 சொல்லக்கூடிய இத்துணைக் கண்டத்தி எ உ னுடைய பொருள்கள் அத்தனையும் வந்து குவிகின்ற மாபெரும் துறைமுகப்பட்டணம் பூம்புகார். வெளி நாடுகளிலிருந்து சிறப்பான குதிரைகள் வந்து இறங் கும் பெருமை படைத்ததாகும். பூம்புகார் துறைமுகம் ஒரு காலத்தில் ஏற்றமும் வெற்றியும் பெற்று விளங்கி யது. அத்தகைய துறைமுகம் இன்றைய தினம் கட லால் அழிக்கப்பட்டுப் போய்விட்டாலுங்கூட இன்று நாட்டிலே முற்போக்கும், நல்ல வளமும் வேண்டு மென்று விரும்புகின்ற இந்த அமைச்சரவை நாக பட்டணத்துத் துறைமுகத்தை விருத்தி செய்வதோடு கூட, தமிழகத்தினுடைய கரையோரங்களில் உள்ள துறைமுகங்களை விருத்தி செய்வதோடுகூட, மாமல்ல புரத்தில் இருந்து அழிந்துவிட்ட துறைமுகங்களையும் மீண்டும் புதுப்பிக்க முயற்சி எடுத்துக்கொள்வதோடு கூட, பூம்புகார் எனும் பழைய துறைமுகத்தையும் மீண்டும் அங்கே தோற்றுவிக்கக்கூடிய முயற்சியையும் எடுத்துக்கொள்ளுமேயானால், இலக்கிய கால எழில் மிக்க துறைமுகம் ஒன்றை - தமிழகத்தினுடைய ஒன்றை வாணிபத்தை உலகெங்கும் பரப்பிய - அத்தகைய துறைமுகம் ஒன்றை மீண்டும் நாம் தோற்றுவித் தோம் என்ற பெருமைக்கும் உள்ளாவோம், - துறைமுகங்களை இங்கு ஏற்படுத்த வேண்டு மென்று கூறுகின்ற நேரத்தில் அமைச்சரவை வழக்க மாக திராவிட முன்னேற்றக் கழகத்தாருடைய கோரிக் கைகளுக்குத் தருகிற பதிலைத் தர முடியாது என்று கருதுகிறேன். வடநாட்டிலே இருப்பதுபோல அணைக்கட்டுகள் தமிழ் நாட்டிலே வேண்டுமென்று கேட்டால்; இங்கே ஆறுகள் கிடையாதே எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/142&oldid=1703691" இலிருந்து மீள்விக்கப்பட்டது