உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 அணைகட்ட முடியும் ?" என்று ஒரு வரியில் கூறி விடு வார்கள். இன்று அவர்கள் எங்கு நோக்கினும் விரிந்து பரந்து இருக்கிற நீலத்திரைக் கடலும்; அந்த நீலத்திரைக்கடலோரங்களில் எத்தகைய துறைமுகங் களைக் கட்டலாமென்பதற்கான கணக்கும்; அவர்கள் மறைத்தாலும் மறைக்க முடியாத அளவுக்கு விரிந்து, பரந்து இருக்கிறது. "ஆறு இல்லை அதனால் அணைக் கட்டு கட்டவில்லை" என்று கூறுகிற அமைச்சர வைக்கு - கடல் இருக்கிறது; நல்ல கரை இருக்கிறது துறைமுகங்கள் இருந்த இடங்களிருக்கின்றன; நல்ல துறைமுகம் அமைக்கலாமே" என்ற யோசனையை நான் கூறுகிறேன். - கன்யாகுமரி மாவட்டத்தில் குளச்சல் குளச்சல் எனும் இடத்தில் ஒரு துறைமுகம் அமைக்க வேண்டும் என்று இங்கே யோசனை கூறப்பட்டது. கன்யாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு சேர்ந்திருக்கிறது என்று பெருமையோடு கூறிக்கொள்ளும் அதே நேரத்தில், அந்த மாவட்டத்திலிருந்து ஒரு அம்மையாரும் நமக்கு அமைச்சராகக் கிடைத்திருக்கிறார்கள். அத்தகைய பெருமைக்குரிய மாவட்டத்தில் குளச்சல் தொகுதி அவ்வம்மையார் வெற்றிபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட இடமாகும். அந்தத் தொகுதியில் இருக்கும் குளச்சல் துறைமுகத்தை மீண்டும் நல்ல முறையிலே ஆக்கு வித்து, அந்தத் துறைமுகம் தமிழகத்தினுடைய பெருமையை நிலை நாட்டும் வகையிலே அமைவதற்கு இந்த அரசு நல்ல பல முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலே மீண்டும் மீண்டும் நான் அந்த அம்மையைக் கேட்டுக் கொள்ளுகிறேன்- அமைச்சர் களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/143&oldid=1703692" இலிருந்து மீள்விக்கப்பட்டது