உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தமிழகத்தினுடைய வாணிபம் ஒரு காலத்திலே ஏற்றம் பெற்று இருந்ததுபோலவே பல்வேறு நாடு களுடைய தொடர்பு கிட்டியது போலவே, மீண்டும் அந்தத் தொடர்பு வளர இந்த ஒருவகையிலாவது தமிழகம் முன்னேற-வளம்பெற, அந்தத் துறை முகங்களை விருத்தி செய்யவேண்டும் என்ற இந்தக் கோரிக்கையை அமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொள் வார்களென்று நான் கருதுகிறேன். - ஏனென்றால் இது எதிர்க் கட்சியிலே இருந்துகொண்டு வரக்கூடிய கோரிக்கையல்ல - காங்கிரசு வட்டாரத்திலிருந்து— அந்தப் பகுதியிலிருந்து-வந்திருக்கிற காரணத்தால் இது நிறைவேறும். ஆகவே, இந்தக் காரியத்தை விரைவில் செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை யோடு- மீண்டும் அந்தப் பூம்புகார் துறைமுகத்தைத் தோற்றுவிக்கிற முயற்சியைக் கொள்ள வேண்டு மென்று கேட்டுக்கொள்ளுகிறேன். று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/144&oldid=1703693" இலிருந்து மீள்விக்கப்பட்டது