உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சிக்க. அபிஷேகிக்க முடியாதே. க அதே நேரத்தில் இரவெல்லாம் இன்பவல்லியோடு கூடிக் கிடந்து வெற்றிலை காய்ந்த வாயுடனே ஆண்டவனைத் தொட் டுக் குளிப்பாட்டி, உணவூட்ட ஒரு பெரு வியாதி பிடித்த பார்ப்பனனுக்குக்கூட உரிமை இருக்கிறதே- இதில் எங்கே தகுதி - திறமை? யாரிடமிருக்கிறது தகுதி? ஆனால், யார் நுழைய முடிகிறது கோயிலில். இவைகளை ஒழித்துக்கட்டி விட்டு, பிறகு கம்யூனல் ஜீ.வோ.-வை ஒழிப்பதற்கு வந்தால்கூட அதில் அர்த்தமுண்டு. எப்படியோ அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். நான் முன்பு கூறியபோது நையாண்டி பேசிய வர்கள், இன்று நம்மோடு சேர்ந்து "அந்தோ அநீதி" என்று அலறுகிறார்கள். சென்னை அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டிற்குச் சென்றுவிட்டது நீதி கேட்க. அதுவும் நம் முயற்சியால்தான்! கிளர்ச்சியால்தான் முடிந்தது என்பதை நினைத்துப் பெருமை யடைகிறோம்; உயர் நீதி மன்றத்துத் தீர்ப்புக் கிடைத்ததும், அரசாங் கத்தின் அடுத்த திட்டம் என்ன என்பது அமுங்கித் தான் கிடந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சென்னையில் துவக்கிய கிளர்ச்சி, திராவிட முன் னேற்றக்கழக மாணவர்கள் காட்டிய காட்டிய உணர்ச்சி, மந்திரி மாதவமேனனை வாய் திறக்கச் செய்தது. சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறோம் என்றார்கள். அதன் பிறகு நாம், பொறுத்திருந்து பார்ப்போம்- போகா விட்டால் கிளர்ச்சி துவக்குவோம் - அதுவும் பொது - வான முறையில் போராட்டம் அமைப்போம் என்று கிளர்ச்சியின் வேகத்தைச் சற்று தளர்த்தினோம். நமது எண்ணமே சர்க்காருக்கு இருக்கும்போது நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/154&oldid=1703703" இலிருந்து மீள்விக்கப்பட்டது