உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 மக்கள் வாழ வகுத்தது சட்டம், சட்டத்திற்காக மக்களில்லை. கம்யூனல் ஜீ.வோ.வுக்கு மாறுதலாகச் சட்டமிருந்தால், சட்டத்தைச் சரிப்படுத்த வேண்டி யது முறையா-அல்லது ஒரு பெரிய சமுதாயத்தின் உரிமையை உடைத்து நொறுக்கி உள்ளம் எரியச் செய்வது முறையா? என்றுதான் நாம் கேட்கிறோம். 1920ம் ஆண்டில் எஸ். எஸ். எல். சி., பரீட்சைக் குச் சென்றவர்களின் தொகை இருபதாயிரம். இன்று 1950ஆம் ஆண்டில் அறுபத்தெட்டாயிரம்! இப்படி வளர்ந்து வந்த திராவிடரின் கல்வி உயர்வைக் கருவறுக்க சட்டத்தை வாளாக்குகிறார்கள் க செய்தவர்கள் ஐந்து பேர்கள். அதிலே மூன்று பேர்கள் தென்னாட்டு நிலை தெரியாத வடநாட்டவர் சட்டம் கள். இருவர்கள் தென்னாட்டவர்கள். ஒருவர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியார்; மற்றவர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர். எங்கிருந்து நீதி கிடைக்கும்? இந்த நிரபராதி திராவிடருக்கு? எங்கிருந்து உரிமை கிடைக்கும்? - உளுத்துப்போன சமுதாயத்துக்கு! சமூக நீதி தேவை யென்றால்-பரந்த நோக்கம் பேசு கின்றார்கள். தகுதி திறமை பேசுகிறார்கள் - இந்தத் தகுதியும் திறமையும் சமுதாயப் பிரச்னை வரும்போது காட்டப்படுகிறதா ? கல்விச் சாலைகளுக்குச் செல்ல தகுதி திறமை யென்று கர் ஜிக்கின்ற கனவான்களைக் கேட்கிறேன் காலையில் எழுந்து ஸ்நானம், நேமம், நிஷ்டை, விரதம், அள வில்லாத ஆண்டவன்'பக்தி, பழுத்த ஆஸ்தீகம் இத் தனைத் திருக் குணங்களும் அமைந்த ஒரு திராவிடன், ஆலயத்துட் சென்று ஆண்டவனைத் தொட்டு அர்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/153&oldid=1703702" இலிருந்து மீள்விக்கப்பட்டது