உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நமது கரூர் தோழர் குழந்தையை எடுத்துக் கொள்ளுங்களேன். தோல்விதான்; ஆனாலும் என்ன ஆயிற்று? அவர் தோல்வியுற்றார் என்பதால் நாம் அவரை இயக்கத்தை விட்டு விலக்கியா விட்டோம்? இல்லை. இல்லை நாம் அவரை யனுப்பத் தயாராக இல்லை. அவர் போகவும் தயாராக இல்லை. அவர், தான் தோற்ற மறுநாள் நாமக்கல் சென்று- தமிழ் நாட்டி லேயே மிகப் பெரிய தொகுதியும் எட்டு லட்சம் வாக் காளர்களைக் கொண்டதுமான அவ்விடத்தில் போட்டி யிடும் நமது சொல்லின் செல்வர் ஈ. வெ. கி. சம்பத் அவர்கள் இருபத்தையாயிரம் வோட்டுகள் அதிகத் தில் காங்கிரசை முறியடித்தார் என்பதை அறிந்து அவரை பாராட்டி விட்டு-பிறகு "குளித்தலையிலே கருணாநிதியின் சேதி என்ன?' என்ற ஆவலுடன் இன்று காலையிலேயே இங்கு வந்து-என்னுடனேயே இருந்து - எனது மகிழ்ச்சியிலே பங்கேற்று - பல கிராமங்களுக்கும், பட்டி தொட்டிகளுக்கும் என்னுட னேயே வந்திருந்தார் என்பதோடு - இனி, தான் தீவிரமாகப் பணியாற்றப் போவதாகவும் உறுதி தரு கிறார். ஆகவே, அவர் தோற்றார் செயல் வீரரானார். - தோழர் செழியன் அவர்களை எடுத்துக்கொள்ளு வோமே - அவரை ஒரு நல்ல எழுத்தாளராகத்தான் நீங்கள் தெரிந்து கொண்டிருந்தீர்கள்; அவர் பேச் சாளராக இருந்ததில்லை, சென்ற முறை நான் இங்கு பேசியபோது அவரும் பேசினார். ஆனால் எத்தனை தடங்கல்கள்; தட்டுத் தடுமாற்றங்கள் - சிந்திப்பதற் கும். பேசுவதற்கும் இடையே எவ்வளவு நேரம் எடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/28&oldid=1703215" இலிருந்து மீள்விக்கப்பட்டது