உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேற்றக் 27 நாட்டுச் சரித்திரத்திலேதான்; அதுவும் திராவிட கழகத்தவரிடத்தில் மட்டுமேதான் காண முடியும்! இப்போது இந்த மேடையில் தோற் றுப் போனவர்கள் வரிசையாக வந்து பேசினார்கள் என்றால், அதற்கு என்ன அர்த்தம்? காங்கிரசுக்காரர் கள் தோற்றார்களென்றால் இப்படி வந்து பொது மேடையிலே பேசவே மாட்டார்கள். காரணம், அவர் கள் தோற்று ஓடும்போது முதுகிலே காயம் தாங்கிய வர்களாக இருப்பார்கள். மக்களிடையே வந்து அந்த முதுகைக் காட்ட அஞ்சுவார்கள் ! ஆனால் என் நண்பர்களெல்லாம்-திராவிட முன்னேற்றக் கழகத் தின் சிங்கங்களெல்லாம்-தோற்றவர்களாக இருந் தாலும் - உங்களிடையே துணிவோடு வந்து பேசு கிறார்கள். ஆமாம்! அவர்கள் மார்பிலே காயம் தாங்கி யவர்கள்! மறத் தமிழர் பரம்பரையிலே வந்தவர்கள். ஆகவேதான், "பாருங்கள்! பாருங்கள்! மாதாக்களே, பிதாக்களே! புறநானூற்று வழிவந்தோரே! நாங்கள் பெற்ற காயம் மார்பில், முதுகிலல்ல." என்று தைரி யத்துடன் மேடையில் கூறித் தங்கள் பெருமையை உயர்த்திக் கொள்ளுகின்றனர். ஏனெனில் தோற்ற வர்- வென்றவர் என்ற வேறுபாடின்றி தொண்டு செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். காங்கிரசிலே ஒருவர் தோற்றார் என்றால் .........? என்றால்.........? சென்ற தடவை திரு. குமாரசாமி ராஜா தோற் றார்-இப்போது இறந்து விட்டார்—அன்று என்ன வாயிற்று? தோற்றவர் கவர்னரானார். பொன்னேரியிலே திரு. பக்தவத்சலனார் தோற் றார். என்ன ஆயிற்று? மந்திரியானார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/27&oldid=1703214" இலிருந்து மீள்விக்கப்பட்டது