உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஆனால், பேசியவர்களில் பலர் சுயேச்சைகள் அவர்களைக் கட்டுப்படுத்த - அவர்களுக்குக் கண்ணி யத்தைக் கற்பிக்க யாருமே கிடையாது க வேறு சிலர் காங்கிரசு தோழர்கள். அவர்களோ கட்டுப்பாட்டை மீறி - கடமையை மறந்து நீண்ட நாட்களாகி விட்டன. ஆகவே அத்தகைய துர்பாஷை களை - தேவையற்ற வார்த்தைகளைத் தேர்தல்கால வெற்றிக்காக மட்டுமே பயன்படுத்தியதாகக் கருத வேண்டுமே தவிர, கருணாநிதி அவர்களது பகைவன் அவனைப் புண்படுத்தவேண்டும் என்பதற்காகச் சொல் லப்பட்டவை அவை என்று நினைக்கவே கூடாது. வரை இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் நூறு இடங்களுக்குமேல் போட்டியிட்டு, இது பனிரண்டு இடங்களையே கைப்பற்றியிருக் கிறது என்றாலும், நாட்டு மக்கள் உள்ளத்திலே அது எத்தகைய நல்லிடத்தைப் பெற்றிருக்கிறது என் பதை நீங்கள் நன்கு உணருவீர்கள். கேட்கிறேன் - ய நான், எந்த நாட்டுச் சரித்திரத்திலேயாவது நீங்கள் இந்த விசித்திரத்தைக் கண்டிருக்கிறீர்களா? வெற்றி பெற்றவர் வீராப்போடு நிமிர்ந்து நின்று-விழிகளிலே களிப்பும் மொழியிலே புதிய உற்சாகமுந் தோன்ற மக்களைப் பார்த்து - அவர்களிடமிருந்து வாகைமாலை சூட்டிக்கொள்ளுவார்கள். இது உண்மை! ஆனால், எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா. தோற்றுப் போனவர்கள் மளமளவென்று மக்கள் மத்தியிலே வந்து, "நான் ஏன் தோற்றேன்?' என்று விளக்கு வதை. எந்த நாட்டுச் சரித்திரத்திலேயும் காண முடியாத இந்த வியக்கத்தக்க விசித்திரத்தை இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/26&oldid=1703213" இலிருந்து மீள்விக்கப்பட்டது