உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செலவாம் - சர்க்காரே 30 பனிரண்டாயிரம் செலவு செய்யலாமென்கிறது - அதில் ஆறில் ஒருபங்குதான் செலவு. ஆனால் பெற்ற வோட்டுகளோ இருபதினா யிரம். ஆகவே இன்னும் கொஞ்சம் செலவுசெய்ய வசதியிருந்திருந்தால் நிச்சயம் வெற்றிபெற்றிருக்க முடியும் அவர். லால்குடியிலே அம்பில் தர்மலிங்கம். அவரும் தோற்றிருக்கிறார்.நான் மூன்றாந்தேதியன்று அவருக் காகப் பேசினேன். அப்போது வெற்றி அவர் கையி லிருப்பதைக் கண்டேன் ஆனால் அவர் முதல் நாள் இரவு சிறிது நேரம் தூங்கி விட்டார். அவர் தூக்கத் திலே சிறிது சாமர்த்தியசாலி!-ஆனால் சட்டசபை யில் தூங்கக்கூடியவர் அல்ல-அன்றென்னவோ தூங்கி விட்டார். அறிஞர் அண்ணா அவர்கள் இங்கு பேசினார்களே "பத்தாம் தேதியன்று பாதி ராத்திரி யிலே சில குள்ள நரிகள் பதுங்கிப் பதுங்கி வரும் பணத்தோடு! தூங்கி விடாதீர்கள் தோழர்களே ! என்று. அதைப்போலவே தான் தருமுவின் அந்தத் தூக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கையில் ஒன்று இரண்டு என்றல்ல ஐந்து, பத்து என்று ரூபாய் நோட்டுக்கத்தைகளை எடுத்துக்கொண்டு தொகுதிக் குள் புறப்பட்டு விட்டார்கள் சூதுக்காரர்கள் சிலர். அதனால்தான் அம்பில் கிட்டத்தட்ட நாலாயிரம் வோட்டுகள் வித்தியாசத்தில் தோற்று விட்டார். திருச்சியிலே எம். எஸ். மணி தோற்றாரென்றால் அவர் பெற்ற வோட்டுகளோ நாற்பதினாயிரம். செலவு ரூபாய் நானூறு அல்லது ஐநூறுதானிருக் கும். அதிலேயே டெபாசிட் கட்டியிருக்கிறார். அது .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/30&oldid=1703217" இலிருந்து மீள்விக்கப்பட்டது