உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க 35 என் வோட்டை உதயசூரியன் பெட்டியில் தான் போட்டேன் " என்று மகிழ்ச்சியோடு சொன்னார். ன்” குளித்தலைத் தொகுதியில் பலஇடங்களில் அதுபோல நடந்திருக்கிறது. பணத்தையும் வாங்கிக்கொண்டு உதயசூரியனுக்கே வோட்டுப் போட்டிருக்கிறார்கள் ; அத்துடன் பணத்தையும் போட்டிருக்கிறார்கள். சில பெட்டிகளில் அரை ரூபாய், கால் ரூபாயென்று நாண யங்கள் கிடந்தன. ஆனால் அவையெல்லாம் அபேட் சகருக்குச் சொந்தமல்ல. அரசாங்கத்துக்கே தான் சொந்தம் என்று எடுத்துக்கொண்டு விட்டனர். அப் படி அங்கே போடமுடியாத சிலர் இந்தத் தேர் தல் வெற்றிவிழா கூட்டத்திலே எனக்கு அன்பளிப்பு என்று ஒருரூபாய்களாகத் தந்திருக்கிறார்கள். எனக்கு வோட்டும் தந்தார்கள்; ஒரு ரூபாய் நோட்டும் தரு கிறார்கள். இப்படியாக வாக்கு மீறாத தோழர்கள் தந்த வாக்குகள் தான் எனக்கு வெற்றியைத் தந்திருக் கிறது அதுபோல வாக்குப்பெறுவதற்கு முன் தங்களிடம் தந்த வாக்குறுதிகளை மறவாது உங்க ளுக்கு என்றும் குன்றாத்தொண்டு புரிவேன் என்று கூறிக்கொள்ளுகிறேன். வணக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/35&oldid=1703222" இலிருந்து மீள்விக்கப்பட்டது